Home latest news மார்கெட் போயிடுச்சி!.. நான் தோத்துப்போன நடிகரா?!.. மனம் திறந்து பேசும் பிரசாந்த்!…

மார்கெட் போயிடுச்சி!.. நான் தோத்துப்போன நடிகரா?!.. மனம் திறந்து பேசும் பிரசாந்த்!…

prashanth

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் என கலக்கிய தியாகராஜனின் மகன் பிரசாந்த். 1990ம் வருடம் வெளிவந்த வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார். நல்ல உயரம், நல்ல நிறம், அழகான முகம் என ரசிகர்களை கவர்ந்தார் பிரசாந்த். குறிப்பாக இவருக்கு நிறைய பெண் ரசிகைகளும் உருவானார்கள். தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வெற்றிகளை கொடுத்தார்..

பாலுமகேந்திரா, மணிரத்தினம், ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்திருக்கிறார். தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கேட்டபோது ‘விஜய் பார்ப்பதற்கு என் தம்பி போல இருக்கிறார்’ என சொல்லி நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய் ஜீன்ஸ் படத்தில் பிரசாந்துடன் ஜோடி போட்டு நடித்தார்..

அதேநேரம் திருமண வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் சில வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார் பிரசாந்த். அதனால் அவரின் மார்க்கெட் சரிந்து போனது. அந்த இடைவெளியில்தான் அஜித், விஜய் போன்றவர்கள் மார்க்கெட் பிடித்தார்கள். அதன்பின் அவ்வப்போது சில படங்களில் நடித்தாலும் பிரசாந்தால் பழைய மார்க்கெட்டை பிடிக்க முடியவில்லை. விஜயின் கோட் படத்தில் ஒரு சின்ன வேடத்திலும் பிரசாந்த் நடித்திருந்தார்..

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய பிரசாந்த் ‘என்னோட சினிமா மார்க்கெட் போயிடுச்சு. நான் ஒரு தோல்வி அடைந்த நடிகர் என நான் எப்போதும் என்னை நினைத்தது இல்லை.. இங்கே பலபேர் ஒருவேளை சாப்பாடு கூட இல்லாம இருக்காங்க.. ஆனா நான் பிறந்த போதே கோடீஸ்வரன் வீட்டு பையன்.. அதனால வாழ்க்கையில் எந்த தோல்வியும் எனக்கு பெரிதாக தெரியாது’ என்று சொல்லியிருக்கிறார்.

Previous articleமுதல் சீன் நடிச்சவுடனே படம் ஹிட்டுன்னு சொன்ன கவுண்டமணி!.. அட அந்த படமா?!…
Next articleபுது படத்தில் ரஜினிக்கும் கமலுக்கும் இதுதான் கேரக்டரா?!.. ஃபேன்ஸ்க்கு செம ட்ரீட்தான்!..