46 வருடங்களுக்குப் பின் ரஜினியும் கமலும் மீண்டும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். இந்த படத்தை யார் இயக்கப் போகிறார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. லோகேஷ் கனகராஜின் பெயர் முதல் அடிபட்டது. ஆனால் அவர் ரத்தம் தெறிக்கும் ஆக்சன் கதையை சொன்னதால் அது டேக் ஆப் ஆகவில்லை. எனவே நெல்சனை டிக் அடித்திருக்கிறார்கள்.
சினிமாவில் நடிக்க வந்த புதிதில் ரஜினி, கமல் இருவருமே தொடர்ந்து பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்தார்கள். ஒரு கட்டத்தில் தனித்தனியாக நடிக்க துவங்கினார்கள். பல வருடங்களாகவே இருவருமே சினிமாத்துறையில் போட்டி நடிகர்களாக வலம் வந்தார்கள். அதேநேரம் இரண்டு பேரும் நல்ல நண்பர்களாகவும் இருந்தார்கள்.
இந்நிலையில்தான், பல வருடங்களுக்குப் பின் இருவரும் மீண்டும் இணையும் காலம் தற்போது வாய்த்திருக்கிறது. இந்த படத்தின் புரமோஷூட் இன்று சென்னையில் நடந்தது. பிரசாந்த் ஸ்டுடியோவில் ஒரு தளத்தில் இரண்டு தளங்களில் புரமோசூட் வீடியோவை எடுத்திருக்கிறார்கள்.
ஒரு தளத்தில் மெக்கானிக் செட்டும், ஒரு தளத்தில் ஹோட்டல் செட்டும் போடப்பட்டிருக்கிறது. அங்குதான் காட்சிகளை எடுத்துள்ளனர். இதைப்பார்க்கும் போது ரஜினி, கமல் இருவரில் ஒருவர் மெக்கானிக்காகவும், ஒருவர் ஹோட்டல் தொடர்பான வேலை செய்பவராகவும் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது..





