Homelatest news80s லுக்கில் ரஜினி, கமல்!.. புரமோவுல எடுத்த அந்த சீன்!.. இப்பவே ஹைப் ஏறுதே!…

80s லுக்கில் ரஜினி, கமல்!.. புரமோவுல எடுத்த அந்த சீன்!.. இப்பவே ஹைப் ஏறுதே!…

பல வருடங்களுக்குப் பின் ரஜினியும் கமலும் ஒன்றாக இணைந்து நடிக்கும் படத்தின் வேலைகள் துவங்கியிருக்கிறது.. இது ரஜினி மற்றும் கமல் ஆகிய இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. 80களில் பல திரைப்படங்களில் ரஜினியும், கமலும் ஒன்றாக இணைந்து நடித்தார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் தனித்தனி பாதையில் பயணித்தார்கள்.. தற்போது மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்..

இந்த படத்தை நெல்சன் இயக்கவுள்ளார். இந்த படம் தொடர்பான புரமோஷூட் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் நடந்திருக்கிறது. ஒரு ஸ்டுடியோவில் மெக்கானிக் செட் மற்றும் ஹோட்டல் செட் போட்டு இந்த புரமோ வீடியோவை எடுத்திருக்கிறார்கள்..

அதில் ஒரு குறிப்பிட்ட காட்சி செமயாக வந்திருக்கிறதாம். அதாவது காரின் சாவியை ரஜினி தூக்கி வீச கமல் அந்த கேட்ச் பிடித்து காரை ஸ்டார்ட் பண்ண ரஜினி ஸ்டைலாக வந்து காருக்குள் அமர இரண்டு பேரும் காரில் புறப்பட்டு செல்வது போல ஒரு காட்சி எடுத்திருக்கிறார்கள். அந்த காட்சி அசத்தலாக வந்திருக்கிறதாம்..

குறிப்பாக இந்த புரமோ ஷூட் நடந்த 2 நாட்களும் ரஜினி செட்டில் மிகவும் கலகலப்பாகவும், ஜாலியாக இருந்திருக்கிறார். ஒருபக்கம் இந்த புரமோ வீடியோவில் ரஜினியும், கமலும் 80களில் இருந்த லுக்கில் இருந்திருக்கிறார்கள். எனவே படம் முழுக்க 80களில் வருவது போலவா இல்லை படத்தின் பிளாஷ்பேக்கில் இப்படி காட்சிகள் இருக்கிறது என்பது படம் வந்த பிறகு தெரியவரும்..

RELATED ARTICLES

Most Popular

Recent Comments