---Advertisement---

நடிகை மேல பைத்தியமா இருந்த சிம்பு!.. ஷாக்கான டி.ஆர்!… ஒரு பிளாஷ்பேக்!…

Published on: February 10, 2026
---Advertisement---

அப்பா டி.ராஜேந்தர் பிரபலமான இயக்குனர் என்பதால் சுலபமாக சினிமாக்கு வந்தவர்தான் அவரின் மகன் சிம்பு. சிம்புவை சின்ன வயதிலேயே சினிமாவுக்கு கொண்டு வந்து விட்டார் டிஆர். சின்ன வயசிலேயே ஹிட் படங்களை கொடுத்தார் சிம்பு. அதன்பின் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். நன்றாக நடனமாடுவது. ரஜினி மாதிரி ஸ்டைல் செய்வது என ரசிகர்களை கவர்ந்தார். இவருக்கென ஒரு ரசிகர் கூட்டமும் உருவானது..

திறமையான நடிகராக இருந்தும் சினிமாவில் எல்லாத் துறைகளைப் பற்றிய நிறைய அறிவு இருந்தும் முன்னணி நடிகராக இல்லாமல் இருப்பதற்கு சிம்புவின்செயல்பாடுகள்தான் காரணம் என திரையுலகினர் விமர்சிக்கிறார்கள். சிம்பு தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

kushbu

இந்நிலையில்தான் சில வருடங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சிக்காக நடிகை குஷ்பு சிம்புவை பேட்டி எடுத்தார். அப்போது ‘எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.. சின்ன வயசுல ஏதோ ஒரு விருது கொடுக்கும் விழாவில் உங்களுக்கு அடுத்து நான்தான் உட்கார்ந்திருந்தேன்.. எனக்கெல்லாம் அப்ப அவ்வளவு பெருமை.. உங்க போட்டோவை என் தலையணைக்கடியில் வச்சிக்கிடுதான் தினமும் தூங்குவேன்.. என் அப்பா, அம்மாவே இவன் என்ன குஷ்பு மேல இவ்ளோ பைத்தியமா இருக்கான்னு பேசிட்டு இருந்தாங்க.

நான் வாழ்க்கையில அதிக முறை பார்த்த படம் உங்களுடையதுதான்.. நீங்க நடிச்ச வருஷம் 16 படத்தை குறைந்தது 150 தடவைக்கும் மேல பார்த்திருப்பேன்’ என்று சிம்பு கூற குஷ்பு வெட்கத்தில் சிரித்தார்..