மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். முதல் படத்திலிருந்து ரசிகர்களை சுண்டி இழுத்தார். ரகுமானின் இசையில் இருந்த புதிய ஒலியும், மேற்கத்திய இசையும் அவருக்கு ரசிகர்களை உருவாக்கியது. ஏ.ஆர்.ரகுமானின் வருவால் இளையராஜாவின் மார்க்கெட்டே குறைந்து போனது..
தொடர்ந்து ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ் என பல படங்களில் இசையமைத்து இளசுகளை தன் பக்கம் இழுத்தார் ஏ.ஆர் ரகுமான்.
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் இசையமைத்தார். ஹிந்தியில் இவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லினர் படத்திற்கு இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ஏ.ஆர்.ரகுமான் மின்சார கனவு படத்தில் இசையமைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.. அப்போது ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடலுக்கு இசைக்கும் சமயத்தில் நான் நோன்பில் இருந்தேன். அப்போதுதான் அந்த பாடலுக்கான டியூன் எனக்கு வந்தது.. அந்த டியூனை வாசித்தபோதே நான் அழுதுவிட்டேன்.. இதுதான் நாம் எதிர்பார்த்த டியூன் என்று உணர்ந்தேன்’ என சொல்லியிருக்கிறார்..
