வாடிவாசல் திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் அந்தப் படத்தில் அமீர் இருப்பதால்தான் சூர்யா தரப்பிலிருந்து தாமதமாகிறது என்றெல்லாம் சில வதந்திகள் வந்தன. அந்த நேரத்தில் பருத்திவீரன் பிரச்சினை தலைத்தோங்க அமீருக்கும் சூர்யா குடும்பத்திற்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால் வாடிவாசல் படத்தில் அமீரும் இருந்ததனால் சூர்யா யோசிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.
இதைப் பற்றி அமீர் சமீபத்திய ஒரு பேட்டியில் விளக்கமாக கூறியுள்ளார். சூர்யாவை நடிகராக பார்ப்பதற்கு முன்பே சூர்யாவும் அமீரும் நண்பர்களாம். நந்தா படத்தில் அமீர் உதவி இயக்குனராக வேலை செய்துள்ளார். அப்பொழுது இன்னும் நெருக்கமான நண்பர்களாக மாறியிருக்கின்றனர். அதன் பிறகு அமீர் முதன் முதலாக மௌனம் பேசியதே படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.
படத்தை பார்த்துவிட்டு சூர்யா அமீரிடம் ‘ஜீ.. படத்தை மக்கள் ரொம்ப ரசிக்குறாங்க’ என சந்தோஷமாக சொல்லியிருக்கிறார். ஆனால் அமீரோ ‘ஓ.. அப்படியா’ என்று மட்டும் சொல்லியிருக்கிறார். இது சூர்யாவுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம். ஆனால் நான் இப்படித்தான். எதையும் பெருசாக அலட்டிக் கொள்ளமாட்டேன். அது சூர்யாவுக்கும் தெரியும். நாங்கள் பேசிக் கொள்ளும் போதே வாங்க ஜீ.. உட்காருங்க ஜீனு தான் பேசிப்போம்.
ஆனால் சார் சொல்லணும்னு இந்த சினிமா துறை நிர்ப்பந்திக்கும் போது அதுக்கு நான் செட்டாகமாட்டேன். எனக்கு அது வரவும் வராது. இருக்கலாம். நான் 5 படங்கள் பண்ணியிருப்பேன். சூர்யா 50 படங்கள் பண்ணியிருக்கலாம். அவர் பேன் இந்தியா படம் ட்ரை பண்ணலாம். அப்போ அவருடைய உயரம் வேறு. அப்படியிருக்கும் போது நான் போய் சங்கடத்தை கொடுக்கக் கூடாது.
அதனால் விலகி இருந்து சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டும். இப்படித்தான் பாலாவிடமிருந்து விலகினேன். சீமானிடமிருந்து விலகினேன். ஒரு சமயம் எனக்கு காய்ச்சல்னு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். ஆனால் அந்த மருத்துவமனையின் சூழ் நிலை எனக்கு பிடிக்கவில்லை. அப்போது ஸ்ரீ பட சூட்டிங்கில் இருந்த சூர்யாவுக்கு விஷயத்தை சொல்லி எப்படியாவது வெளியே வர உதவி பண்ணுங்க ஜீனு சொன்னேன்.
சூர்யா வந்து நிர்வாகத்திடம் பேசி என்னை அங்கிருந்து அழைத்துக் கொண்டு வந்தார். இப்படித்தான் எங்க நட்பு. இதே மாதிரி இப்போது அவரிடம் அணுக முடியுமா? அவருடைய உயரம் வேறு, ஆனால் இப்போது கூடுதலாக சார் சொல்லணும்னா நான் அதுக்கு உடன்பட முடியாது. சரி சொன்னாலும் என் உள்ளம் அதை ஏற்காது. அப்போ விலகி இருந்து ரசிப்போம்னு வந்துட்டேன் என அமீர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
