1992ல் இயக்குனர் செல்வா இயக்கத்தில் வெளிவந்த தலைவாசல் படம் மூலம் அறிமுகம் ஆனவர் விஜய். இப்படத்தின் வெற்றிக்கு பின் தலைவாசல் விஜய் என்ற அடைமொழியிலேயே அழைக்கப்பட்டார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி எனப் பல்வேறு மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தலைவாசல் விஜய், விஜயகாந்த் குறித்து சொன்ன விசயங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. பெரிய மருத்து படப்பிடிப்பில் நடந்த அந்த விசயம் என்னவெனில், பெரிய மருது படத்தின் ஒரு முக்கியமான சண்டைக் காட்சியில், விஜயகாந்த் ஒரு பெரிய கத்தியால் எதிரிகளைத் தாக்குவது போலப் படமாக்கப்பட்டது. பொதுவாக சினிமாவில் சண்டைக் காட்சிகளில் டம்மி கத்திகளையே பயன்படுத்துவார்கள். அந்த காட்சியில் விஜயகாந்த் என் கையை வெட்டுவது போல காட்சி எடுகக் வேண்டும். ஆனால் அங்கு டம்மி கத்தி இல்லை. நிஜ கத்திதான் இருந்தது. உடனே விஜயகாந்த் தலைவாசல் விஜயிடம் என் மேல் நம்பிக்கை உள்ளதா என்று கேட்டார். ஒரு நிமிடம் திக் என்று இருந்தது. ஆனாலும் ஏதும் தப்பா நடந்தாலும் கேப்டன் நம்மை விட மாட்டார் என்ற நம்பிக்கை இருந்ததால் ஓகே சொன்னேன்.
கேப்டன் அந்த கத்தியைச் சுழற்றிய விதம் பயங்கரமாக இருந்தது. கத்தி என் முகத்திற்கு மிக அருகில் வந்து சென்றது. ஒரு சிறிய பிசிறு ஏற்பட்டிருந்தாலும் எனக்குப் பலத்த காயம் ஏற்பட்டிருக்கும். ஆனால், விஜயகாந்த் சண்டைக் காட்சிகளில் மிகவும் கைதேர்ந்தவர் என்பதால், அந்த ஆபத்தான காட்சியை மிகத் துல்லியமாகச் செய்து முடித்தார் என்று வியந்து கூறியுள்ளார். மேலும், படப்பிடிப்பு முடிந்ததும் விஜயகாந்த் தன்னிடம் வந்து பயந்துட்டியா விஜய்? என்று அன்போடு கேட்டதாகவும் அவர் கூறினார்.
