latest news
Nayanthara: சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு நயன்தாரா கிட்டதான் அத பார்த்தேன்! ராதிகா சொன்ன விஷயம்
80கள் காலகட்டத்தில் அனைவருக்குமான ஒரு கனவு கன்னியாக சினிமா உலகில் கொடி கட்டி பறந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. தன்னுடைய காந்த பார்வையால் அனைவரையும் ஈர்த்தவர். அந்த காலகட்டத்தில் எத்தனையோ முன்னணி நடிகைகள் இருந்தனர். ராதிகா, ராதா, அம்பிகா, ஸ்ரீபிரியா என பல உச்ச நட்சத்திரங்கள் இருந்தாலும் சில்க் ஸ்மிதாவை போல எந்த நடிகைகளுக்கும் பெரிய அளவு வரவேற்பு கிடையாது.
சில்க் ஸ்மிதா ஒரு பாடலில் ஆடுகிறார் என்றாலே அந்த படத்தின் கதை, அதில் யார் யார் நடிக்கிறார்கள் என்றெல்லாம் விநியோகஸ்தர்கள் பார்க்க மாட்டார்கள். உடனே அந்த படத்தை வாங்கி விடுவார்கள். அந்த அளவுக்கு 80கள் காலகட்டத்தில் ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வந்தவர் சில்க் ஸ்மிதா. ஜென்சி கிட்ஸ்கள் வரைக்கும் மிகவும் பிரபலமாக இருக்கிறார்.
அதற்கு காரணம் அவருடைய பெருமைகளையும் அவருடைய திறமைகளையும் இன்றளவு நாம் பேசிக் கொண்டிருப்பதனால். இந்த நிலையில் நடிகை ராதிகா சமீபத்திய ஒரு பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில் சில்க் ஸ்மிதாவை பற்றியும் அவருடைய அனுபவங்களை ஷேர் செய்துள்ளார். அதாவது சில்க் ஸ்மிதாவை ராதிகா எப்பொழுதும் மிளகாய் என்றுதான் கூப்பிடுவாராம்.
ஆனால் அவளுக்குள் ஒரு மன உறுதி தைரியம் இருக்கிறது. ஆனால் உள்ளுக்குள் மிகவும் மென்மையானவள். சில்க் ஸ்மிதாவிற்கு பிறகு அந்த ஒரு மன உறுதி தைரியத்தை நான் நயன்தாராவிடம் தான் பார்த்தேன் என நயன்தாராவை பற்றியும் ராதிகா கூறியுள்ளார். நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவும் ராதிகாவும் சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
