nayan
nayan

கடந்த வருடம் சொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு பெரிய நடிகர்களின் படங்களும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. சின்ன பட்ஜெட் படங்கள் மட்டும் தான் ஆதிக்கத்தை செலுத்தி இருந்தன. ரசிகர்களை பொறுத்த வரைக்கும் எத்தனை நல்ல கதைகள் கொண்ட படங்கள் வெளியானாலும் தன்னுடைய நடிகரின் படம் வெளியானால் மட்டும்தான் அந்த ரசிகர்களுக்கு அது ஒரு திருவிழா கோலமாக இருக்கும்.

அந்த வகையில் இந்த வருடம் கோடைகால விடுமுறையாக பல படங்கள் வெளியாக இருக்கின்றன. பொங்கலுக்கு விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் சில பல காரணங்களால் அதனுடைய ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. பிப்ரவரி 20ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் சம்மர் விடுமுறையாக என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது என்பதை பற்றி தான் இங்கு நாம் பார்க்க இருக்கிறோம். இன்னொரு பக்கம் தேர்தல் தேதிக்காகவும் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அதிலிருந்து சில படங்கள் ரிலீஸ் தேதியில் இருந்து தள்ளி வைக்கப்படலாம். அதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் சில படங்களின் ரிலீஸ் தேதியும் அடுத்தடுத்து வெளியாகும்.

இந்த நிலையில் சூர்யா நடிக்கும் கருப்பு திரைப்படம் தேர்தல் தேதிக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கின்றது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதன் பிறகு தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர திரைப்படம் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது.

நீண்ட நாளாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் எல் ஐ கே திரைப்படம் மார்ச் 27ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த வரிசையில் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2, ஜெயம் ரவி நடிக்கும் கராத்தே பாபு, கார்த்தி நடிக்கும் சர்தார் 2 போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக தயாராகி வருகின்றன.