பெரிய நடிகர்களை வைத்து அதிகமான பட்ஜெட்டில் படம் எடுத்து படம் ஓடாமல் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்து வரும் நிலையில் அறிமுக நடிகர்கள் நடித்து சின்ன பட்ஜெட்டில் எடுத்த படங்கள் கூட கதை நன்றாக இருந்தால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்று வருகிறது
. கடந்த சில வருடங்களில் குட் நைட், அயோத்தி, குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி, சிறை போன்ற திரைப்படங்கள் அப்படி வெளியாகி ஹிட் அடித்தது..
அந்த வரிசையில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான With Love திரைப்படம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. படம் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே சிறப்பு காட்சியை பார்த்த பலரும் படத்தை பாராட்டித் தள்ள இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த அனஸ்வரா ராஜனின் நடிப்பை பல இயக்குனர்களும் பாராட்டினார்கள்..
ஒரு நல்ல ஃபீல் குட் திரைப்படமாக வெளிவந்த வித் லவ் திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் இந்தியாவில் மட்டும் 13 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் இந்த படத்திற்கான வசூலை சேர்த்தால் எப்படியும் 20 கோடியை தாண்டியிருக்கும் என கணிக்கப்படுகிறது.இந்த படத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
