Sweetie Naughty Crazy review

அடல்ட் காமெடி ஜானரில் இன்றைய உறவுமுறைச் சிக்கல்களை மையமாக வைத்து ஒரு துணிச்சலான முயற்சியை மேற்கொண்டிருக்கிறது ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’.

கதைக் களம்

கல்லூரித் தோழர்களான த்ரிகுண் மற்றும் ஸ்ரீ ஜீத்தா கோஷ் ஆகியோரின் நட்பு காதலாக மலர்கிறது. ஒரு கட்டத்தில் த்ரிகுண் தனது கடந்த கால அந்தரங்க உறவுகளைப் பற்றி (வயதில் மூத்த பெண்களுடனான தொடர்பு குறித்து) வெளிப்படையாகக் கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாலும், காதலனை நல்வழிப்படுத்த எண்ணி அவரைத் திருமணம் செய்து கொள்கிறார் நாயகி.

திருமணத்திற்குப் பின், தனது மனைவியின் குடும்பத்தைச் சந்திக்க ஆவலுடன் கோத்தகிரி செல்லும் நாயகனுக்கு அங்கு ஒரு ‘மெகா அதிர்ச்சி’ காத்திருக்கிறது. மனைவியின் அக்கா (இனியா) மற்றும் அம்மா (ராதா) ஆகியோரைப் பார்த்ததும் த்ரிகுண் ஏன் நிலைகுலைந்து போகிறார்? அந்தச் சிக்கல்களில் இருந்து அவர் எப்படித் தப்பினார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

த்ரிகுண்: இப்படிப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய மற்றும் சங்கடமான சூழல்களைக் கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்கத் தனித் துணிச்சல் வேண்டும். அதைச் சிறப்பாகக் செய்துள்ளார் த்ரிகுண்.

ஸ்ரீ ஜீத்தா கோஷ்: காதலனின் தவறுகளை மன்னித்து, அவரிடம் அன்பு காட்டும் ஒரு நவீன காலத் துணையாக ரசிகர்களைக் கவர்கிறார். இப்படி தவறை மன்னிக்கும் மனைவி நமக்கு கிடைபாளா என்று ஏங்க வைக்கிறார்.

இனியா & ராதா: நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றும் இனியா, கவர்ச்சியிலும் நடிப்பிலும் அதிரடி காட்டியுள்ளார். ‘சுந்தரா டிராவல்ஸ்’ ராதா, இதில் ‘ஆண்டி’ கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார்.

மற்றும் தம்பி ராமையா, சத்யன், ஆலி, ரவி மரியா என ஒரு பெரிய நகைச்சுவை பட்டாளமே இருந்தாலும், படத்தின் கதைக்களம் ‘காமம்’ சார்ந்தே நகர்வதால் இவர்களது நகைச்சுவை பெரிதாக எடுபடவில்லை.

ஒளிப்பதிவு சி.விஜய், இசை அருணகிரி. ராஜசேகர்.ஜி என்பவர் இயக்கியுள்ளார். உறவுமுறைகளைச் சிதைக்கும் வகையிலான ஒரு கதைக் கருவைத் தேர்ந்தெடுத்தாலும், அதை ஆபாசத்தின் எல்லைக்குச் செல்லாமல் நகைச்சுவை கலந்து வழங்க முயன்றிருக்கிறார்.
உறவுமுறைகளில் வக்கிரம் இருப்பதாகத் தோன்றினாலும், அதை ஒரு பொழுதுபோக்குத் திரைப்படமாக மாற்றுவதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார்.

பாசிட்டிவ்:

*விறுவிறுப்பான திரைக்கதை.

  • இளைஞர்களைக் கவரும் வசனங்கள் மற்றும் கவர்ச்சி.

நெகட்டிவ்:

  • உறவுமுறைகளைச் சித்தரித்துள்ள விதம் சிலருக்கு அதிருப்தியைத் தரலாம்.

முடிவாக: ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’ – தேவையற்ற விவாதங்களை தவிர்த்துவிட்டு , ஒரு அடல்ட் காமெடித் திரைப்படமாகப் பார்த்தால் இளைஞர்களுக்கு இது ஒரு ‘கலர்ஃபுல்’ விருந்து.

REVIEW OVERVIEW
ஸ்வீட்டி நாட்டி கிரேஸி
sweetie-naughty-crazy-movie-review-in-tamilஸ்வீட்டி நாட்டி கிரேஸி' - தேவையற்ற விவாதங்களை தவிர்த்துவிட்டு , ஒரு அடல்ட் காமெடித் திரைப்படமாகப் பார்த்தால் இளைஞர்களுக்கு இது ஒரு 'கலர்ஃபுல்' விருந்து