Connect with us

D56: ஃபர்ஸ்ட் டைம் ஃபேண்டஸி!.. தனுஷ் 56 கதை இதுதான்!.. ஹைப் ஏத்தும் மாரி செல்வராஜ்!..

latest news

D56: ஃபர்ஸ்ட் டைம் ஃபேண்டஸி!.. தனுஷ் 56 கதை இதுதான்!.. ஹைப் ஏத்தும் மாரி செல்வராஜ்!..

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியவர் மாரி செல்வராஜ். தென் மாவட்ட மக்கள் சந்தித்த சாதிய பிரச்சனைகளை தனது படங்களில் தொடர்ந்து பேசி வருகிறார். எனவே இவர் சாதிய திரைப்படம் எடுப்பதாக சில இயக்குனர்களும், ரசிகர்களும் விமர்சனம் செய்கிறார்கள்.. ஆனால் மாரி செல்வராஜ் நான் சாதிக்கு எதிராகவே படம் எடுக்கிறேன் என தொடர்ந்து சொல்லி வருகிறார்..

மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை, மாமன்னன், பைசன் ஆகிய படங்கள் சாதிய பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.. இதில் மாமன்னன், வாழை, பைசன் 3 படங்களுமே நல்ல வசூலை பெற்றது.

இந்நிலையில், தனுஷின் அடுத்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கவிருக்கிறார்.. இந்த படம் பற்றி பேசிய மாரி ‘ தனுசுடன் நான் இணையும் படம் ஒரு சரித்திர கால படம். முதல் முதலாக நான் ஒரு பேண்டஸி கலந்த சரித்திர திரைப்படட்தை உருவாக்கப் போகிறேன். அதில் அரசியலும் இருக்கிறது.. என்னுடைய பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை, மாமன்னன், பைசன் படங்களில் வந்தது போல தனுஷ் சாதிய பிரச்சனைகளை சந்திக்கிறார்.. ஆனால் அவர் அதற்கு ஒரு முடிவை கண்டுபிடிக்கிறார்.. இதுதான் படத்தின் கதை..

சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிராக தனுஷ் என்ன செய்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.. இந்த கதையை கேட்ட தனுஷ் இந்த படத்தை நாம் அதிக பட்ஜெட்டில் எடுக்க வேண்டும்.. என்னுடைய கெரியரிலும், உங்களுடைய கெரியரிலும் இது பெரிய படமாக இருக்க வேண்டும் என என்னிடம் கூறியிருக்கிறார். எனவேதான் படம் தொடர்பான பணிகள் நேரம் எடுக்கிறது’ என சொல்லியிருக்கிறார்.

To Top