kamruthin
kamruthin

நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 9ல் ரெட் கார்டு வாங்கிக் கொண்டு வெளியேறியவர் கம்ரூதின். விஜய் டிவியில் ஏற்கனவே ஒரு சீரியலில் லீடு ரோலில் திவ்யா கணேஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். பிக்பாஸ் மூலம் இன்னும் பிரபலமாகலாம் என்று நினைத்திருந்த கம்ரூதீனை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார் விஜய்சேதுபதி. இருந்தாலும் வீட்டில் 90 நாள்கள் இருந்து மக்களின் அன்பையும் சம்பாதித்தார்.

பார்வதியுடனான அவரின் நெருக்கம்தான் மக்களை முகம் சுழிக்க வைத்தது. இவர்களின் நெருக்கம்தான் கம்ரூதினையும் வெறுக்க வைத்தது. எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல் இருந்திருந்தால் கண்டிப்பாக கம்ரூதின் தான் டைட்டில் வின்னராக மாறியிருப்பார். ஆனால் சூழ்நிலை அவரை வீட்டிலிருந்து வெளியேற வைத்தது. இந்த நிலையில் வழக்கமாக ஒவ்வொரு பிக்பாஸ் சீசன் முடிந்தும் அதில் உள்ள போட்டியாளர்களை விஜய் தொலைக்காட்சியில் செலிபிரிட்டியாக பல நிகழ்ச்சிகளுக்கு வரவழைப்பார்கள்.

அப்படி சூப்பர் சிங்கர் ஃபினாலே நிகழ்ச்சியில் மொத்த பிக்பாஸ் போட்டியாளர்களுமே கலந்து கொண்டனர். அதே போல் நாளை ஒளிபரப்பாக இருக்கும் ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சிக்கும் 6 பிக்பாஸ் செலிபிரிட்டிகள் கலந்து கொள்கின்றனர். அது சம்பந்தமான புரோமோ நிகழ்ச்சி இன்று வெளியானது.

அதில் கம்ரூதினும் இருக்கிறார். ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களை பெரும்பாலும் எந்த நிகழ்ச்சிக்கும் செலிபிரிட்டியாக அழைக்கப்படுவதில்லை. ஆனால் கம்ரூதீன் மக்களின் மனதை வென்றவர் என்பதால் அவரை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கின்றனர். வந்தவர் சும்மா ஒன்னும் வரவில்லை. செம வைப்பில் கலக்கியிருக்கிறார். அவரின் ஸ்டைல், சிரிப்பு, ஹியூமர் என நாளை மொத்த டிஆர்பியும் ஸ்டார்ட் மியூஸிக் பக்கம் தான் திரும்ப போகிறது.

பிக்பாஸ் வீட்டில் இருந்த கம்ரூதினா இது? என்று ஆச்சரியப்பட்டு கேட்கும் அளவுக்கு இந்த நிகழ்ச்சியில் ஃபன் செய்துள்ளார்.