டோலிவுட் நட்சத்திர தம்பதியான ராம் சரண் மற்றும் உபாஸனா கொணிதெலா, ஜனவரி 31 அன்று இரட்டைக் குழந்தைகள் பிறந்ததையடுத்து மகிழ்ச்சியில் உள்ளனர். ஏற்கெனவே அவர்களுக்கு கிளிம் காரா என்ற மகள் உண்டு. சமீபத்தில் நடைபெற்ற பெயர்சூட்டும் விழாவில், ஆன்மிக ஆழமும் குடும்பப் பெருமையும் பிரதிபலிக்கும் வகையில், இரட்டைக் குழந்தைகளின் பெயர்களை தம்பதியினர் அறிவித்தனர்.
இந்த பெயர்களின் அர்த்தங்களை மெகாஸ்டார் சிரஞ்சீவி சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
“எல்லையற்ற மகிழ்ச்சியுடனும், தெய்வீக அருளுடனும் எங்கள் இரண்டு சிறிய ஆசீர்வாதங்களின் அழகான பெயர்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி
‘ சிவராம் கொணிதெலா’ மற்றும் ‘அன்வீரா தேவி கொணிதெலா’ (𝑺𝒉𝒊𝒗𝒂 𝑹𝒂𝒎 𝑲𝒐𝒏𝒊𝒅𝒆𝒍𝒂” & “𝑨𝒏𝒗𝒆𝒆𝒓𝒂 𝑫𝒆𝒗𝒊 𝑲𝒐𝒏𝒊𝒅𝒆𝒍𝒂”)
சிவராம் – இரண்டு நிரந்தரமான இலட்சியங்களின் ஆழமான சங்கமம். சிவ என்பது சிவ சங்கர வர பிரசாத் அவர்களிடமிருந்து உதித்த, உள்ளார்ந்த வலிமை, ஆன்மிக ஆழம் மற்றும் அமைதியை பிரதிபலிக்கிறது. ‘ராம்’ என்பது ராம் சரணிடமிருந்து வந்தது; நீதிமுறை, கருணை மற்றும் ஒழுக்கத் துணிச்சலை குறிக்கிறது.
இந்த பெயர், உள்ளார்ந்த சக்தியும் பொறுப்பான செயலும் இணையும் சமநிலையை குறிக்கிறது.

அன்வீரா தேவி – தெய்வீக பெண்மை (Divine Feminine) யை பிரதிபலிக்கும் அபூர்வமும் வலிமையும் கொண்ட வெளிப்பாடு. அன்வீரா என்பது அஞ்சாமை, திடத்தன்மை மற்றும் தெய்வீக பாதுகாப்பைக் குறிக்கிறது; கனக துர்கா தேவியின் அருளால் உதித்த பெயர். அருள், துணிச்சல் மற்றும் நிலையான வலிமையை பிரதிபலிக்கும் பெயர்.
சிவராம் மற்றும் அன்வீரா தேவி தங்கள் அழகான வாழ்க்கைப் பயணத்தை தொடங்கும் இந்த தருணத்தில், உங்கள் ஆசீர்வாதங்களை வேண்டுகிறோம். அன்பும் நன்றியுடனும் ” என்று சிரஞ்சீவி சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
