2016 முதல் 2022 வரை தமிழ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரைக்கு தமிழக அரசுக்கான விருது பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று விருது வழங்கும் விழாவும் நடந்தது. எனவே தமிழக சினிமா பிரபலங்கள் பலரும் அதில் கலந்து கொண்டார்கள்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சினிமா பிரபலங்களுக்கு விருது வழங்கினார்..
அப்போது சூர்யாவுக்கு சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்களுக்கான சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது. ஆனால் சூர்யாவுக்கூ கொடுக்கப்பட்ட விருதில் ஏ.ஆர் ரகுமானின் பெயர் இருந்தது. அதாவது பொன்னியின் செல்வன் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு கொடுக்கவேண்டிய சிறந்த சிறந்த இசையமைப்பாளர் விருதைத்தான் சூர்யாவுக்கு கொடுத்தனர்.

மேடையிலே அந்த பெயரை பார்த்து சிரித்த சூர்யா கீழே அமர்ந்திருந்த ஏ.ஆர்.ரகுமானை காட்டி ‘இது உங்கள் விருது’ என கை காட்டினார். அதன்பின் கீழே இறங்கி வந்து ‘உங்கள் விருதை எனக்கு மாற்றிக் கொடுத்து விட்டார்கள்’ என சொல்ல ரஹ்மான் விழுந்து விழுந்து சிரித்தார்.. அதன்பின் சூர்யா, ரஹ்மான் இருவருக்குமான விருதுகள் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.
