Connect with us

DC Movie:இதுக்கெல்லாம் சென்சார் கிடையாதாப்பா? காதலர் தின கிஃப்டா DC படம் கொடுத்த பரிசு

latest news

DC Movie:இதுக்கெல்லாம் சென்சார் கிடையாதாப்பா? காதலர் தின கிஃப்டா DC படம் கொடுத்த பரிசு

லோகேஷ் கனகராஜ் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் திரைப்படம் DC. அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. படத்தில் சஞ்சனா ஏகே, வாமிகா கேபி என நடிகைகள் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் லோகேஷ் முகமெல்லாம் ஒரே ரத்தக்கறையோடு இருந்தார். அதிலிருந்தே படத்தில் பயங்கரமான வன்முறை காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் அருண் மாதேஸ்வரன் இயக்கம் என்றால் ரத்தம் பார்க்காமல் விடமாட்டார். இதில் லோகேஷும் சேர்ந்து விட்டார்.

அதனால் படம் எப்படியான படமாக வரப் போகிறது என்பதை பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காதலர் தினம் என்பதால் காதலர் தின பரிசாக DC படத்தின் ஒரு சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு காதலர் தினத்தை சொல்லியிருக்கிறார்கள்.

அதில் லோகேஷ் ஒருவரை அரிவாளால் கழுத்தை கரகரவென அறுக்கும் காட்சி பார்ப்பவர்களை கொலை நடுங்க வைக்கிறது. அந்த மாதிரியான காட்சி இதுவரை எந்தவொரு படத்திலும் பார்த்ததில்லை. இதை குழந்தைகளோ அல்லது 18வயதுடைய இளைஞர்களோ பார்க்கும் போது அவர்கள் மனதில் எப்படியான ஒரு மன உணர்வை ஏற்படுத்தும் என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது.

To Top