எச்.வினோத் தற்போது ஜனநாயகன் பற்றி மறைமுகமாக பேசியிருப்பது சோசியல் மீடியாவில் பேசு பொருளாக மாறியுள்ளது. சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எச்.வினோத் தொடர்ந்து திரில்லர் ஆக்ஷன் படங்களாகவே எடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தார். அவரின் இயக்கத்தில் கடைசியாக வெளியான துணிவு படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
அந்தப் படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் ஜன நாயகன் படத்தை இயக்கினார். அந்தப் படம் சில பல பிரச்சினகளால் இன்னும் ரிலீஸாகமலேயே இருக்கிறது. அதுவும் விஜய் அரசியலில் தீவிரமாக இறங்கியதுடன் ஆளும் கட்சியையும் மத்தியில் ஆளும் கட்சியையும் எதிர்த்து கடுமையாக விமர்சனங்களை வைத்துக் கொண்டே இருக்கிறார்.
ஏற்கனவே விஜய் படம் என்றாலே ரிலீஸில் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். இப்போது கூடுதலாக அவர் அரசியலில் இறங்கிய பிறகு ரிலீஸாக கூடிய படம் என்பதால் இன்னும் அந்தப் படத்திற்கு நிறையவே பிரச்சினைகள் வந்தன. அதுவும் எச்.வினோத் அவருடைய படத்தில் அரசியல் கொஞ்சம் பேசத்தான் செய்வார். நேர்கொண்ட பார்வை ஆகட்டும் துணிவு படமாகட்டும் அரசியல் போர்வை இருந்தது.
ஜன நாயகன் படத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே அரசியல் இருக்கிறது. அரசியல் சார்ந்த வசனங்கள் அதிகமாகவே இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சசிகுமார் நடிப்பில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் படமான மை லார்டு படத்தை பற்றி எச்.வினோத் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
அந்தப் படத்தில் அரசியல் இருக்கிறது. அதுவும் சசிகுமார் கேரக்டர் பெயரை குறிப்பிட்டு அவரை ஒரு பத்திரிக்கை காப்பாற்றுவதாக அந்தப் படத்தில் காட்சி இருக்கிறது. இதே நான் அரசியல் பேசினார் யாரும் என்னை காப்பாற்ற வரமாட்டார்கள் என ஜன நாயகன் பிரச்சினையை மறைமுகமாக பேசியிருக்கிறார் எச்.வினோத்.
