
விஜய் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இந்த படம் கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. தணிக்கை அதிகாரி ஒருவர் புகார் சொல்லியிருக்கிறார். படம் மறுத்தணிக்கை செய்ய வேண்டும்.. அதற்கு மேலும் சில வாரங்கள் அவகாச வேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இப்போது வரை படத்திற்கு தீர்வு எட்டப்படவில்லை..
எனவே சமீபத்தில்தான் இந்த அப்படம் தொடர்பான வழக்கை தயாரிப்பாளர் வாபஸ் பெற்றார். அதோடு மறுத்தணிக்கைக்கும் அவர் விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் எப்போது படம் மறுதணிக்கை செய்யப்படும் என தணிக்கை வாரியம் சார்பில் இதுவரை எந்த தகவலும் தயாரிப்பாளருக்கு சொல்லப்படவில்லை.
எனவே படம் எப்போது வெளியாகும் என்பது யாருக்கும் தெரியவில்லை. மறுத்தணிக்கை செய்தவுடன் ஒரு வாரத்தில் அதிகாரிகள் படம் பார்த்தால் எப்படியும் இந்த மாத இறுதிக்குள் படத்தை வெளியிடலாம் என தயாரிப்பாளர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது நடப்பது போல தெரியவில்லை..
இந்நிலையில்தான், மைலார்ட் படத்தின் புரமோஷன் தொடர்பாக செய்தியாளர்களிடம் சசிகுமார் பேசிக்கொண்டு இருந்தபோது ஒரு நிருபர் ‘ஜனநாயகன் படம் எப்போது வெளியாகும்?’ என்று அவரிடம் கேட்டார். அதற்கு பதில் சொன்ன சசிக்குமார் ‘ஜனநாயகன் எப்போது ரிலீஸாகும் என என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?.. அந்த படத்தை பார்க்க நானும் ஆவலாக காத்திருக்கிறேன்’ என்று கூறினார்..