
கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் மன்சூர் அலிகான். முதல் படத்திலேயே அசத்தலான வில்லனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் வில்லனாக நடித்தார். குறிப்பாக விஜயகாந்த் நடித்த பல படங்களில் மன்சூர் அலிகான் நடித்திருக்கிறார்.
நடிகராக மட்டுமில்லாமல் சமூக அக்கறை கொண்ட நபராகவும் இருப்பவர் மன்சூர் அலிகான். நடப்பு அரசியலை கடுமையாக விமர்சிக்கும் நபர் இவர். குறிப்பாக பாஜக அரசை இவரை போல யாரும் தைரியமாக விமர்சித்தது இல்லை. தனிக்கட்சி தொடங்கி தேர்தலிலும் போட்டியிட்டிருக்கிறார்..
கடந்த சில வருடங்களாக காமெடி கலந்த வில்லனாக கலக்கி வருகிறார் மன்சூரலிகான். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான் ‘நான் ரஜினியுடன் ஒரே ஒரு படம்தான் நடித்தேன்.. ஆனால் இப்போ கால் பண்ணாலும் அவர் என்னை ‘வாங்க மீட் பண்ணலாம்’னு கூப்பிடுவார்.
விஜய் கூட பல படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் அவருக்கு ஆதரவாக நான் பேசிய போது கூட என்னை பார்க்க அவர் மறுத்து விட்டார்.. இதுதான் இருவருக்கும் இருக்கும் வித்தியாசம்’ என கூறியிருக்கிறார்..