---Advertisement---

கடைசிப் படத்தை முடிவு செய்த ரஜினி!.. தயாரிப்பாளர் அவரா?… ரசிகர்கள் சோகம்!..

Published on: February 17, 2026
---Advertisement---

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமா அளவிலும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் சினிமாவுக்கு நடிக்க வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது 75 வயதிலும் சுறுசுறுப்பாக சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். ரஜினிக்கு பின்னால் பலநூறு நடிகர்கள் நடிக்க வந்தார்கள். ஆனாலும் ரஜினியின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை.. சாதனையை கூட விட்டுவிடலாம்.. அவரின் இடத்தை கூட யாராலும் தொட முடியவில்லை.. இப்போதும் ரஜினி படம் வெளியாகிறது என்றால் அதற்கான ஒரு கிரேஸ் ரசிகர்களிடம் இருக்கிறது..

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்த முடித்துள்ள ரஜினி அடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படத்தை முடித்துவிட்டு தனது பல வருட நண்பர் கமலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. சமீபத்தில் இந்த படத்தின் புரமோ ஷூட் வேலைகளும் நடந்தது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில்தான், ரஜினிகாந்த் தனது கடைசி திரைப்படத்தை முடிந்து முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது. இந்த படத்தை ரஜினியின் சொந்த மகள் சௌந்தர்யாவே தயாரிக்கவுள்ளாராம். அதேநேரம் இந்த படம் கமலுடன் இணைந்து நடிக்கும் படத்திற்கு அடுத்த படமா இல்லை அதற்கு அடுத்த படமா என்பது இப்போது வரை தெரியாமல் இருக்கிறது… மொத்தத்தில் சௌந்தர்யா தயாரிக்கும் படமே ரஜினியின் கடைசிப்படம் என்பது மட்டும் உறுதி என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.