ajith

சுமார் கால் நூற்றாண்டு காலத்தைக் கடந்தும், இன்றும் காதலர் தினம் என்றாலே நம் நினைவுக்கு வரும் முதல் திரைப்படம் காதலர் தினம. 80ஸ் கிட்ஸ்களின் காதல் காவியங்களில் இப்படமும் ஒன்று. இணையதளம் என்றால் என்னவென்றே தெரியாத காலக்கட்டத்தில், சாட்டிங் மூலம் மலரும் காதலை ரசனையோடு சொன்ன இந்தப் படம், தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ஓரளவிற்கு வரவேற்பும் பெற்றது.

இந்தப் படத்தின் நாயகனாக குணால் அறிமுகமாகி, அப்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் ‘கிரேஸ்’ ஏற்படுத்தினார். ஆனால், படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் ஒரு அதிரடித் தகவலைப் பகிர்ந்துள்ளார். படத்திற்குப் பொருத்தமான ஹீரோவைத் தேடி மும்பை சென்றபோதுதான் கோல்ஃப் வீரரான குணாலை சந்தித்துள்ளனர்.

ஒருவேளை குணால் மட்டும் அந்த வாய்ப்பிற்குச் சம்மதிக்கவில்லை என்றால், இந்தப் படத்தில் தல அஜித் தான் நாயகனாக நடித்திருப்பாராம். அஜித்தை மனதில் வைத்து கதையில் சில மாற்றங்களைச் செய்யவும் படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் குணால் உள்ளே வர, அஜித்தின் அந்த வாய்ப்பு கைநழுவிப் போனது என்று தயரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கூறினார்.

இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சோனாலி பிந்த்ரே, அப்போது இளசுகளின் கனவுக்கன்னியாகவே மாறினார். தற்போது ரீ-ரிலீஸில் ‘மௌனம் பேசியதே’ படத்திற்கு இணையாக ‘காதலர் தினம்’ படத்திற்கும் 90ஸ் கிட்ஸ் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

adminram
பாலா 18 ஆண்டுகளாக டிஜிட்டல் செய்தித்துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு முதல் சினிரிப்போர்டர்ஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.