oviya

கேரளா திருச்சூரை சேர்ந்தவர் ஹெலன் நெல்சன். சினிமாவுக்காக ஓவியா என பெயர் மாற்றிக்கொண்டார். துவக்கத்தில் மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்தார். களவாணி திரைப்படம் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அந்த படம் வெற்றி அடைந்ததால் ஓவியாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது..

தொடர்ந்து மன்மதன் அன்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்த பிரபலமானார் ஓவியா. ஆனால் சினிமாவில் கிடைக்காத புகழ் ஓவியாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்தது. முதல் சீசனை மொத்தமாக தனது வசமாக்கி கொண்டார் ஓவியா.

அவருக்காகவே பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தார்கள்.. ஓவிய ஆர்மியெல்லாம் உருவானது. அதன்பின் 8 சீசன்கள் வந்தாலும் அதில் கலந்துகொண்ட பல பெண்கள் ஓவியாவை போல மாற முயற்சி செய்தனர், ஆனால் யாருக்கும் அது அமையவில்லை..

தற்போது சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஓவியா அவ்வப்போது கவர்ச்சி உடைகளை அணிந்து ஃபோட்டோஸ் எடுத்து அந்த புகைப்படங்களை தனது சமூகவலைத்த பக்கங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், ஓவியாவின்
புதிய புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது..

சிவா
முருகன் 10 ஆண்டுகளாக டிஜிட்டல் செய்தித்துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு முதல் சினிரிப்போர்டர்ஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.