---Advertisement---

பேரை மட்டும் யூஸ் பண்ணி பல கோடிகளை அள்ளும் எஸ்.கே!.. தாய்க்கிழவி அப்டேட்!…

Published on: February 19, 2026
---Advertisement---

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் அவ்வப்போது எஸ்.கே புரடெக்‌ஷன் என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். பெரும்பாலும் மினிமம் பட்ஜெட்டில் படமெடுப்பது இவரின் வழக்கம். சில நேரங்களில் மற்றவர்கள் தயாரித்த படங்களை வாங்கி சிவகார்த்திகேயன் வெளியிடுவதும் உண்டு. ராதிகா நடிப்பில் சிவக்குமார் முருகேசன் என்பவர் இயக்கியுள்ள தாய்க்கிழவி திரைப்படம் வருகிற 27ம் தேதி வெளியாகியுள்ளது..

இந்த படத்துக்கு சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் என எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் உண்மை அது இல்லை. மதுரையை சேர்ந்த அழகர் என்கிற விநியோகஸ்தர்தான் இந்த படத்தின் உண்மையான தயாரிப்பாளர். ஆனால் அவர் பணம் முதலீடு செய்தது மட்டுமே. படத்தை முழுவதுமாக எடுத்து கொடுத்தது ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம்..

சிவகார்த்திகேயனின் SK Productions பேனரில் இந்த படத்தை வெளியிடுகிறார்கள் அவ்வளவுதான்.. மற்றபடி இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு ரூபாய் கூட முதலீடு செய்யவில்லை. ஆனால் இதில் விஷயம் என்னவெனில் படத்தின் மொத்த லாபத்தில் அழகருக்கு 33 சதவீதம், படத்தை எடுத்து கொடுத்த ஃபேஷன் ஸ்டுடியோக்கு 33 சதவீதம், சிவகார்த்திகேயனின் பேனரை பயன்படுத்தியதால் அவருக்கு 33 சதவீதம் என லாபத்தை பிரித்து எடுத்துக்கொள்ளவிருக்கிறார்கள்.

அதாவது ஒரு ரூபாய் கூட படத்தில் முதலீடு செய்யாமல் பல கோடிகளை அள்ளப்போகிறார் சிவகார்த்திகேயன். இதை சிவகார்த்திகேயன் மட்டுமில்லை. அட்லி போன்ற சிலரும் கூட பேனரை மட்டும் கொடுத்து கோடிகளை அள்ளிவிடுகிறார்கள். ஒருபக்கம் தாய்க்கிழவி இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்தியன் சேயோன் என்கிற படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது..