---Advertisement---

Jananayagan: சைலண்ட் மோடில் தணிக்கை வாரியம்!.. ஜனநாயகன் ரிலீஸாவது கஷ்டம்தான்!…

Published on: February 19, 2026
---Advertisement---

விஜயின் ஜனநாயகன் திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என்பதுதான் சினிமா ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாகவும், கேள்வியாகவும் இருக்கிறது. பட ரிலீஸுக்கு 4 நாட்களுக்கு முன்பு படத்தை மீண்டும் மறுத்தணிகை செய்ய வேண்டும்.. அதற்கு மேலும் மூன்று வார கால அவகாசம் வேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர கடந்த ஒரு மாதமாக தீர்வு கிடைக்கவில்லை..

இந்த மாதம் 5ம் தேதியே தயாரிப்பாளர் நீதிமன்றத்தில்தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்று விட்டதாகவும் எப்படியும் இந்த மாதம் 19, 20 அல்லது 26, 27 தேதிகளில் எப்படியும் படம் வெளியாகிவிடும் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இப்போது வரை தணிக்கை வாரியம் இந்த தேதியில் நாங்கள் படம் பார்க்கிறோம் என்று தயாரிப்பாளருக்கு எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை.

எனவே கண்டிப்பாக இந்த வாரம் 26, 27 தேதிகளில் ஜனநாயகன் படம் வெளியாக வாய்ப்பில்லை என்கிற நிலை உருவாகியுள்ளது. நடப்பதை பார்க்கும் போது ஜனநாயகன் திரைப்படம் தேர்தலுக்கு பின்னரே வெளியாக அதிக வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.. இது தயாரிப்பாளருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சோகத்தை கொடுத்திருக்கிறது.