
பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே அதிர வைத்தார். தென் மாவட்டங்களில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் சந்தித்த, சந்திக்கும் பிரச்சினைகளை தொடர்ந்து தனது திரைப்படங்களில் பேசி வருகிறார் மாரி செல்வராஜ்.
எனவே அவரை சாதிய இயக்குனராக பலரும் சித்தரிக்கிறார்கள்.. ஆனால் நான் சாதிக்கு எதிரான படங்களை எடுக்கிறேன் என மாரி செல்வராஜ் தொடர்ந்து சொல்லி வருகிறார்.. மேலும் நாம் தொடர்ந்து இது போன்ற படங்களை எடுப்பேன் எனவும் அவர் கூறி வருகிறார்..
பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு பின் அவர் இயக்கிய கர்ணன், மாமன்னன், வாழை, பைசன் ஆகிய எல்லா படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில்தான், தனுஷுடன் மீண்டும் இணையவிருக்கிறார் மாரி செல்வராஜ். இந்த படம் ஒரு சரித்திர கதை என சொல்லப்படுகிறது.. ,மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு தனுஷ் எடுத்ததிலேயே அதிக பட்ஜெட் படமாக இந்த திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்கள். சரித்திர படம் என்பதால் இந்த படத்தில் தனுஷுக்கு புது கெட்டப் இருப்பதக சொல்லப்படுகிறது. அதோடு, இந்த படத்திற்காக சுமார் 6 மாதம் தனுஷ் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.
தனுஷ் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அதையும் முடித்து விட்டுதான் அவர் மாரி செல்வராஜ் படத்துக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.