
இன்று கமல், ரஜினி இணையும் படத்தின் புரோமோ நண்பகல் 12.07மணிக்கு வெளியாகிறது. படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் என்று சொல்கிறார்கள். இருந்தாலும் படத்தின் இயக்குனர் மற்றும் இசை அமைப்பாளர் பற்றிய தகவல் இன்றைய புரொமோவில் இடம்பெறும் என்று தெரிகிறது.
ரஜினியின் ஸ்டைலைப் பார்த்து அதே போல படங்களில் நடித்து முன்னுக்கு வந்தவர் விஜய். ஆனால் வளர்ந்த பிறகு ரஜினியா, விஜயா? முதல் இடம் எனக்குத் தான் என்ற மனப்பான்மையில் நடந்து கொள்கிறார். இது மாதிரி அவருக்குப் பிறகு வந்த சிவகார்த்திகேயனின் மனநிலை இல்லை. தற்போது கமல், ரஜினி இருவரும் இணைந்து நடிக்கும் படம் இவர்களுக்கு எல்லாம் ஒரு பாடமாகத் தான் இருக்கும் என்று தெரிகிறது.
ரஜினிக்கு கமலுக்காக படம் நடித்துக் கொடுக்க வேண்டிய தலை எழுத்து இல்லை. அவருடைய படத்தில் நடிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அவராகவே முன்வந்து தான் இதைச் செய்கிறார். நண்பன் கஷ்டத்தில் இருக்கிறான் என்று தெரிந்து கொண்டே செய்கிறார்.
அந்த வகையில் கமல் ஒருமுறை தன் ஆபீஸில் பாலசந்தரின் உருவச்சிலைக்கான திறப்புவிழா நடத்தினார். அப்போது ரஜினி தான் சிறப்பு விருந்தினராக வந்து அந்த சிலையைத் திறந்து வைத்தார். அப்போது ரஜினி கமல் தயாரிப்புல நிச்சயம் ஒரு படம் நடிக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார்.
அவர் அப்போது சொன்னதை இப்போ நிறைவேற்றி இருக்கிறார். அப்படி நிறைவேற்றணும்னு கட்டாயம் இல்லை. இருந்தாலும் நண்பன் கஷ்டத்துல இருப்பதைத் தெரிந்து கொண்டு அவருக்காக உதவ முன்வந்துள்ளார். கமலும் ரஜினியைத் தன் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்பதில் விருப்பமாகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.