
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல படங்களிலும் இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி. இவரின் இயக்கத்தில் வெளியான பல பாடல்கள் சூப்பர் ஹிட். நான் என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார் அந்த படம் ஹிட். தொடர்ந்து நடித்த சலீம், பிச்சைக்காரன் ஆகிய படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது..
அதுவும், பிச்சைக்காரனுக்கு கிடைத்த 100 கோடி வசூல் விஜய் ஆண்டனியை கோலிவுட்டின் முக்கிய நடிகராக மாறியது. அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களை தயாரிப்பது, இசையமைப்பது, இயக்குவது போன்ற எல்லா வேலைகளையும் விஜய் ஆண்டனி செய்து வருகிறார். ஒருபக்கம் மிகவும் விஜய் ஆண்டனி மிகவும் எளிமையானவர். மனதில் பட்டதை மிகவும் வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர்..
இந்நிலையில், பிச்சைக்காரன் படத்தில் பிச்சை எடுப்பது போல நடித்தது பற்றி சமீபத்தில் ஊடகம் ஒன்றில் முறையில் விஜய் ஆண்டனி ‘நான் யாருக்காக வேண்டுமானாலும் பிச்சை எடுப்பேன்.. அது எங்க அம்மாவாக இருக்கலாம்.. தம்பியாக இருக்கலாம்.. தங்கையாக இருக்கலாம்.. ஏன் உங்களுக்காகவும் இருக்கலாம்.. நீங்கள் என் வீடு தேடிவந்து உண்மையான கண்ணீரோடு ‘சார் இந்த மாதிரி நான் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கிட்டேன்.. நீங்க பிச்சை எடுத்தா நான் உயிர் பிழைச்சிடுவேன் என சொன்னால் நான் பிச்சை எடுப்பேன்’ என கூறியிருக்கிறார்.