
Cinema News
Rukmani vasanth: அப்ப கயாடு லோஹர்!.. இப்ப ருக்மணி வஸந்த்!.. ஓவர் நைட்டில் வைரல் ஆயிட்டாரே!…
கன்னட சினிமாவில் அறிமுகம்:
பெங்களூரை சேர்ந்தவர் ருக்மணி வசந்த். இவரின் அப்பா ஒரு ஆர்மி ஆபிசர். அம்மா ஒரு பரதநாட்டிய நடிகை. ருக்மணி டீன் ஏஜிலேயே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அப்படியே சினிமாவுக்கு வந்துவிட்டார். இவர் நடித்த முதல் திரைப்படம் 2019 ஆம் வருடம் கன்னட மொழியில் வெளியானது. தொடர்ந்து சில கன்னட படங்களில் நடித்தார். ஒரு தெலுங்கு படத்திலும் நடித்தார்.

தமிழைப் பொறுத்தவரை விஜய் சேதுபதி நடித்து வெளியான ACE திரைப்படத்தில் நடித்திருந்தார். அதேபோல் இவரின் புகைப்படத்தை பார்த்துவிட்டு ஏ.ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய மதராஸி திரைப்படத்தில் இவரை நடிக்க வைத்தார். அழகாக இருப்பதோடு திறமையான நடிகையாகவும் Rukmani vasanth பார்க்கப்படுகிறார் இவர்.
மதராஸி படத்தில் SK-வுக்கு ஜோடி:
மதராஸி திரைப்படத்தில் இவரின் நடிப்பை பலரும் பாராட்டினார்கள். இவரின் அடுத்த படமாக காந்தாரா சேப்டன் ஒன் வெளியாகவுள்ளது. ஏற்கனவே 2022ம் வருடம் காந்தாரா வெளியாகி ஹிட் அடித்த நிலையில் தற்போது மிகவும் அதிகமான பட்ஜெட்டில் காந்தாரா சேப்டர் ஒன் உருவாகியிருக்கிறது. KGF 2 – படத்தை தொடர்ந்து கன்னடத்திலிருந்து 1000 கோடி வசூலை பெறும் அடுத்த படமாக Kanthara Chapter 1 இருக்கும் என சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள்..

டிரெண்டிங்கில் Rukmani Vasanth:
இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று பெங்களூரில் நடந்த போது அப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டியோடு ருக்மணி வஸந்தும் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதேபோல் நேற்று வெளியான Kanthara Chapter 1 trailer வீடியோவில் Rukmani Vasanth-ன் தோற்றம் தொடர்பான புகைப்படங்களை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து இவரை ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.

இதனால் கூகுளிலேயே rukmani vasanth என்கிற ஹேஷ்டேக் trending-ல் இருக்கிறது. டிராகன் படம் வெளியாவதற்கு முன்பு கயாடு லோஹரை இப்படித்தான் பலரும் ட்ரெண்டிங் செய்தார்கள். பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் அவரின் புகைப்படத்தை பலரும் பகிர்ந்தார்கள். அதேபோல தற்போது ரசிகர்களின் கனவு கனியாக rukmani vasanth மாறி இருக்கிறார். இவரின் புகைப்படத்தை பகிர்ந்து இன்னும் சில வருடங்கள் இவர் தமிழ் சினிமாவை ஆள்வார் எனவும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.