
Cinema News
Dhanush: இருந்தா தனுஷ் மாதிரி இருக்கணும்… திமிர் பிடிச்சு திரியும் எஸ்கே, சூர்யா…
Dhanush: நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன், சூர்யாவின் படம் குறித்த தகவலால் தற்போது விமர்சிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக இருப்பவர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா. இவர்கள் மூவரின் படத்துக்கே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது மூவரும் வித்தியாசமான கதையில் நடித்து வருகின்றனர். நடிகர் தனுஷ் தன்னுடைய இயக்கத்தில் அடுத்த படமாக இட்லி கடை படத்தினை இயக்கி இருக்கிறார். வித்தியாசமான குடும்ப கதையாக இருக்கும் என டிரெய்லர் வெளியானதில் இருந்து கூறப்படுகிறது.
அதை போல நடிகர் மற்றும் இயக்குனரான ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் முதல் முறையாக சாய் அபயங்கர் இசையில் கருப்பு திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படமும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்து இருக்கிறது.
அதை போல பெரிய வெற்றிக்கூட்டணியான சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றனர்.
மூன்று படங்களுமே நல்ல கதையில் தயாராகி வந்தாலும் இவர்கள் ரிலீஸுக்கு செய்யும் சர்க்கஸ் தான் தற்போதைய பேசு பொருளாக மாறி இருக்கிறது. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தினை பொங்கலுக்கு ஜனநாயகனுக்கு போட்டியாக களமிறக்க இருக்கின்றனர்.
வசூலில் சக்கை போடு போடவில்லை என்றாலும் சுமார் வெற்றியை தட்டி வேண்டும் என்பதற்காக இந்த வேலை எனக் கூறப்படுகிறது. அதுபோல கருப்பு படத்திற்கும் முதலில் பொங்கல் ரேஸ் குறி வைக்கப்பட்டது. ஆனால் இரண்டு பெரிய படங்களுடன் வந்தால் கண்டிப்பாக வேட்டு விழும் என நம்பப்படுகிறது.
அதன் காரணமாக தமிழ் புத்தாண்டில் வெளியிட யோசித்து வந்தாலும் அதே நாளை ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 ரிலீஸ் செய்யப்படலாம் என பல திட்டம் வைத்துள்ளனர். ஆனால் இவர்களில் விதிவிலக்காக தனுஷ் திட்டம் தான் செம வசூல் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய பண்டிகை நாளை குறி வைக்காமல் தொடர் விடுமுறை தினத்தை குறி வைத்து இருக்கிறார். அக்டோபர் 1ந் தேதி இட்லி கடை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதல் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதாலும் அதன்பின்னர் வார இறுதி என்பதாலும் படம் வசூல் குறையாது என நம்பப்படுகிறது.
மற்ற நடிகர்களை போல இல்லாமல் தனக்கென ஒரு நாளை தேர்வு செய்வதில் எப்போதுமே தனுஷ் கில்லி. பெரிய விடுமுறையை பிளான் செய்து பலரிடம் முட்டிக்கொண்டு தன்னை நிரூபித்து அதில் தன் தயாரிப்பாளருக்கு வேட்டு வைக்க அவர் விரும்பியதே இல்லை என்றும் கூறப்படுகிறது.