
Box Office
Lokah Chapter 1: மலையாள சினிமாவில் அதிக வசூல்!… எம்புரானை காலி செய்த லோகா!..
1000 கோடி வசூலை தாண்டிய தெலுங்கு படங்கள்:
முன்பெல்லாம் 100 கோடி வசூலையே மலையாள படங்கள் தொடாது. தமிழ் மற்றும் ஹிந்தி படங்கள்தான் அந்த வசூலை பெற்று வந்தது. ராஜமவுலி போன்ற இயக்குனர்கள் வந்தபின் தெலுங்கு படங்களும் பேன் இந்தியா படங்களாக வெளியாகி வசூலை அள்ளியது. அதிலும் பாகுபலி 2 படம் 1000 கோடி வசூலை தாண்டியது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் பல மொழிகளிலும் வெளியாகி 1800 கோடி வசூலை தொட்டது.
மலையாள சினிமாவைப் பொறுத்தவரை முதல் 100 கோடி வசூலை தொட்டது மோகன்லாலின் புலி முருகன் திரைப்படம்தான். அதன்பின் அவர் நடிப்பில் வெளியான சில படங்கள், மற்றும் பிரித்திவிராஜ் உள்ளிட்ட சில நடிகர்களின் படங்கள் அதிக வசூலை பெற்றது.

வசூலை குவித்த Lokah Chapter 1:
இந்நிலையில்தான் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியான lokah chapter 2 திரைப்படம் மலையாள சினிமா வரலாற்றில் அதிக வசூலை பெற்ற திரைப்படம் என்கிற பெருமையை பெற்றிருக்கிறது. இதுவரை மலையாள சினிமாவில் அதிக வசூலை பெற்ற படமாக பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த எம்புரான் படம் இருந்தது. இந்த படம் 268 கோடி வசூலை பெற்றிருந்தது. ஆனால் Lokah திரைப்படம் உலக அளவில் 275 கோடி வசூலை தாண்டி இருக்கிறது. இந்த படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருந்தார்.
மலையாள சினிமாவில் முதன் முறை:
திரையுலகில் ஒரு ஹீரோ நடித்த படத்தின் வசூலை இன்னொரு ஹீரோ நடிக்கும் படம் முறியடிக்கும் என்பதுதான் வரலாறு. ஆனால் முதல் முறையாக பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஒரு நடிகரின் வசூலை தாண்டி இருப்பது இதுதான் முதல் முறை.

Lokah திரைப்படம் வெளியானது முதல் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. 4 நாட்களிலேயே இப்படம் 100 கோடி வசூலை தாண்டியது. அதன்பின் தினமும் பல கோடி வசூலை பெற்று வந்தது. இந்நிலையில்தான் உலக அளவில் இப்படம் 275 கோடியை தொட்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமே 164.13 கோடி வசூல் எனவும் வெளிநாட்டில் 115.75 கோடி எனவும் சொல்கிறார்கள். வெறும் 30 கோடியில் எடுக்கப்பட்ட Lokah Chapter 1 திரைப்படம் மலையாள சினிமாவின் வரலாற்றில் அதிக வசூலை பெற்ற படமாக மாறி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.
இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்த துல்கர் சல்மான் லோகாவை இன்னும் 5 பாகங்கள் எடுக்க திட்டமிட்டிருக்கிறோம். அதில் நானும் நடிக்கப்போகிறேன் என அறிவித்திருக்கிறார்.