
Cinema News
அஜித்துக்கு இவ்வளவுதான் சம்பளம்!.. கறாரா சொன்ன தயாரிப்பாளர்.. தெறித்து ஓடிய சுரேஷ் சந்திரா..
குட் பேட் அக்லியால் வந்த நஷ்டம்:
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான Good Bad Ugly நல்ல வசூலை பெற்றாலும் தயாரிப்பாளருக்கு 70 கோடி வரை நஷ்டம் கொடுத்தது. அதே நேரம் தியேட்டர் அதிபர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இந்த படம் நல்ல லாபத்தை கொடுத்தது.
ஒரு பக்கம் இளையராஜா போட்ட வழக்கில் இந்த படத்தை நெட்பிளிக்ஸிலிருந்து தூக்கிவிட்டனர். இதனால் தயாரிப்பாளருக்கு மேலும் 80 கோடி நஷ்டம் என்கிறார்கள். ஆக மொத்தம் இந்த படத்தால் தயாரிப்பாளருக்கு 150 கோடி வரை நஷ்டம் என சொல்லப்படுகிறது. எனவேதான் இளையராஜா தொடர்ந்த வழக்கு எதிராக நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள்.

AK64 படத்தில் நீடிக்கும் குழப்பம்:
ஒருபக்கம் அஜித்தின் அடுத்த படம் AK64 எப்போது தொடங்கும் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. அஜித் அடுத்த படத்தையும் ஆதிக் இயக்குகிறார் என்பது உறுதியான நிலையில் இப்படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ், ஏஜிஎஸ், லைக்கா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் முன்வரவில்லை. அதற்கு காரணம் அஜித் கேட்ட 180 கோடி சம்பளம். படத்தின் மொத்த பட்ஜெட்டையும் சேர்த்தால் 300 கோடி வருவதால் இப்படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை.
அஜித்துக்கு வலைவிரிக்கும் தில் ராஜு:
அதன்பின், ஒருவழியாக இந்த படத்தை ROMEO PICTURES ராகுல் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டு பட வேலைகள் இப்போது நடந்து வருகிறது. இந்த படத்திற்கு சம்பளமாக டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகளை அஜித் கேட்டிருக்கிறாராம். இந்நிலையில்தான் ஒரு புதிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது. விஜயை வைத்து வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜு சமீபத்தில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவை அழைத்து பேசியிருக்கிறார். இருவருக்கமான மீட்டிங் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்திருக்கிறது. அந்த மீட்டிங்கில் அஜித்தை வைத்து தான் ஒரு படம் தயாரிக்க விரும்புவதாக தில் ராஜு பேசியிருக்கிறார்.
அஜித்தின் சம்பளம்:
எல்லாம் பேசி முடித்தபின் வியாபார கணக்கு போட்ட தில் ராஜு ‘அஜித்துக்கு 100 கோடி வரை சம்பளம் கொடுக்கிறேன்’ என சொல்லி இருக்கிறார். அதைக்கேட்டு ஆடிப்போன சுரேஷ் சந்திரா ‘சாரிடம் ஆலோசித்துவிட்டு சொல்கிறேன்’ என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாராம். கண்டிப்பாக அஜித் இந்த சம்பளத்தில் நடிக்க சம்மதிக்க மாட்டார் என்றே சொல்கிறார்கள். பேரம் பேசி நடித்தாலும் இது ஆதிக் படத்திற்கு முன்பா இல்லை பின்பா என்பது தெரியவில்லை.