">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வீட்டுப் பொருட்களை ஆன்லைனில் வாங்கி பணத்தை இழந்த நடிகை? நூதனமாக திருடிய கும்பல்!
பிரபல நடிகையான சினேகா உல்லால் ஆன்லைனில் வீட்டுக்கு ஷாப்பிங் செய்த போது 25,000 ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.
பிரபல நடிகையான சினேகா உல்லால் ஆன்லைனில் வீட்டுக்கு ஷாப்பிங் செய்த போது 25,000 ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.
நடிகை சினேகா உல்லால் பிரபலமான பாலிவுட் நடிகை. இப்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் தனது வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்கியுள்ளார். அதற்கான பில் 25,000 ரூபாய் வந்துள்ளது. அவர் ஷாப்பிங் செய்த கடையைச் சேர்ந்தவர்கள் பொருட்களை வீட்டுக்கே அனுப்பி வைப்பதாகவும் பணத்தை அங்கே கொடுத்தால் போதும் என்றும் கூறியுள்ளனர்.
அதன் பின்னர் சில நிமிடங்களில் அவருக்கு மற்றொரு அழைப்பு வர, அதில் கடையில் இருந்து பேசுவதாகவும், அவர் ஆர்டர் செய்த பொருட்கள் கைவசம் இல்லை என்றும் குடோனில் இருந்துதான் அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் அவரது கிரெடிட் கார்டு விவரங்களையும் கேட்க அவர்களை நம்பிய சினேகா உல்லால் அளித்துள்ளார். அடுத்த சில நொடிகளில் அவரது அக்கவுண்ட்டில் இருந்து 25,000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மறுபடியும் அந்த கடைக்கு போன் செய்து கேட்க அவர்கள் தாங்கள் அப்படி எதுவும் அழைக்கவில்லை என அவர்கள் கூறியுள்ளனர். இரண்டாவது முறை அழைத்தது தாங்கள் இல்லை என்றும் சொல்லியுள்ளனர். அதன் பிறகுதான் தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்ற உண்மை சினேகாவுக்கு தெரிய வந்துள்ளது. இதைப்பற்றி சமூகவலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.