
Cinema News
Kalaimamani Award: குரூப்ல டூப்.. கலைமாமணி விருதை பெற போகும் நடிகர்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்
Kalaimamani Award:
தமிழ்நாடு அரசு வழங்கும் உயரிய கலாச்சார விருதாக கருதப்படுவது கலைமாமணி விருது. அதனுடைய முக்கிய அம்சங்கள்:
- கலை மற்றும் பண்பாட்டு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருதை தமிழ்நாடு அரசு வழங்குகிறது.
- குறிப்பாக இசை, நடனம், நாடகம், இலக்கியம் ,பாரம்பரிய கலை போன்ற துறைகள் இதில் அடங்கும்.
- வருடத்திற்கு ஒருமுறை இந்த விருது வழங்கப்படுகிறது.
விருதுடன் சான்றிதலும் பதக்கமும் சேர்த்தே வழங்கப்படுகிறது. இதனுடைய முக்கியமான பொருள் என்னவெனில்,
- மனிதநேயம் மற்றும் சமூக கண்ணோட்டத்தோடு முன்னேற்றம் செய்ய தமிழ் துறையில் உள்ள கலைஞர்களை ஊக்குவிப்பது
- அவர்களுக்கு மதிப்பளிப்பதும் புகழ்வதும் இதனுடைய முக்கிய பொருளாக பார்க்கப்படுகிறது.
சுருக்கமாக சொன்னால் தமிழ்நாட்டின் உயரிய விருதாக இது பார்க்கப்படுகிறது. அந்தந்த துறைகளில் சிறந்து விளங்குவது அவர்களின் பங்களிப்பை வெளிப்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.
கலைமாமணி விருது அறிவிப்பு:
இந்த நிலையில் சமீபத்தில் 2021, 2022 ,2023 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கே ஜே ஏசுதாஸ் அவர்களுக்கு எம் எஸ் சுப்புலட்சுமி விருது வழங்கப்பட உள்ளது. மேலும் சாய்பல்லவி, எஸ் ஜே சூர்யா, அனிருத், ஸ்வேதா மோகன், கே மணிகண்டன் ,ஜார்ஜ் மரியன் ,சாண்டி ,நிகில் முருகன் உள்ளிட்டவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகின்றது.

இந்த விருதை தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் அடுத்த மாதம் வழங்கப்பட உள்ளன. இதில் 2022 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பட்டியலில் நடிகர் விக்ரம் பிரபுவின் பெயரும் இருக்கிறது. தமிழ் சினிமா மற்றும் கலை துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக விக்ரம் பிரபுவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
விமர்சிக்கும் நெட்டிசன்கள்:
அதுமட்டுமல்ல அவருடன் சேர்ந்து நடிகை ஜெயா, பாடலாசிரியர் விவேகா, புகைப்பட கலைஞர் டி லட்சுமி காந்தன் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது. விருது வாங்கும் அனைவருக்கும் ரசிகர்களிடமிருந்தும் பிரபலங்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு பக்கம் வாழ்த்து மழை வந்தாலும் இன்னொரு பக்கம் நெட்டிசன்கள் வழக்கம் போல இதை டேக் செய்து தங்களுடைய கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதாவது கலைமாமணி விருது வாங்க போகும் பிரபலங்கள் ,இதில் குரூப்பில் டூப் என பதிவிட்டு அதில் விக்ரம் பிரபுவை இணைத்து கிண்டலடித்து வருகின்றனர். அதாவது அவர் அப்படி என்ன தமிழ் சினிமாவில் சிறந்த பங்களிப்பை கொடுத்தார். அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு படமும் பெரிய வெற்றியை கொடுக்கவில்லையே என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.