
Cinema News
வடிவேலு ஒரு விஷக்கிருமி!.. அவருக்கு எந்த தகுதியும் இல்ல!.. பொங்கிய சீனியர் ரிப்போர்ட்டர்!.
யுடியூப் விமர்சனங்கள்:
எப்போது எல்லோரின் கையிலும் ஸ்மார்ட்போன் வந்து விட்டதோ அப்போதே யூடியூபில் புதிய திரைப்படங்களை விமர்சனம் செய்வது என்பது அதிகரித்துவிட்டது. முன்பெல்லாம் ஒன்றிரண்டு பேர் மட்டும் இருந்தார்கள். இப்போது பலரும் ‘நானும் விமர்சனம் செய்கிறேன்’ என வீடியோக்களை போட்டு வருகிறார்கள். இதில் புளூசட்ட மாறன் போன்ற நபர்களின் வீடியோக்களை பல லட்சம் பேர் பார்க்கிறார்கள்.
படம் வெளியாகி முதல் காட்சி முடிந்தவுடனேயே பல youtube சேனல்களிலும் விமர்சனங்கள் வந்துவிடுகிறது. விமர்சனம் மோசமாக இருந்தால் அதை பார்த்துவிட்டு பலரும் படத்திற்கு போகாமல் தவித்து விடுகிறார்கள். இது திரைப்படத்தின் வசூலை பாதிக்கிறது என இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சொல்லி வருகிறார்கள்.
விமர்சனங்கள் சினிமாவை அழிக்கிறதா?
திரையரங்க வளாகத்திற்குள் யுடியூப் சேனலை அனுமதிக்கக் கூடாது என என திரைப்பட உரிமையாளர் சங்கம் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களுக்கும் வலியுறுத்தியது. ஆனாலும் முதல் காட்சி முடிந்த பின் யூடியூப்பில் விமர்சனம் வருவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. இவர்களால்தான் படத்திற்கு வசூல் இல்லை என திரையுலகினரும், ‘ நீங்க நல்ல படம் எடுத்தால் படம் ஓடும். எங்கள் விமர்சனத்தால் உங்கள் படம் பாதிக்கிறது என்பதை ஏற்க முடியாது’ என யுடியூபர்ஸ்களும் சொல்லி வருகிறார்கள்.

பொதுக்குழுவில் பொங்கிய வடிவேலு:
சமீபத்தில் கூட நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தபோது அதில் பேசிய நடிகர் விஷால் ‘நாங்கள் உழைத்து சம்பாதிக்கிறோம். அவர்கள் எங்களை வைத்து சம்பாதிக்கிறார்கள். அவர்களை திருத்த முடியாது’ என பேசி இருந்தார். அதேபோல் அங்கே பேசிய நடிகர் வடிவேலு ‘10 பேர் சேர்ந்து சினிமாவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை விடவே கூடாது. யுடியூபர்ஸ்களை தூங்க விடாதபடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவர்களை ஒழித்துக் கட்டினால் மட்டுமே சினிமா நன்றாக இருக்கும் என பேசி இருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக ஊடகம் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த சினிமா சீனியர் ரிப்போர்ட்டர் வலைப்பேச்சு பிஸ்மி விஷால் சொல்வது முட்டாள்தனமான கருத்து. ஒரு திரைப்படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக ரசிகர்கள் சென்று பார்ப்பார்கள். டூரிஸ்ட் பேமிலி போன்ற திரைப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது ஊடகங்கள்தான். இவ்வளவு பேசும் விஷால் அவர் நடிக்கும் புது படம் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடாமல், எந்த புரமோஷனும் செய்யாமல் ஒரு படத்தை வெளியிடட்டும் பார்க்கலாம்.
ஊடகங்கல் இல்லாமல் சினிமா இல்லை:
அப்படி செய்தால் தியேட்டரில் கூட்டமே இருக்காது. நடிகைகளை பற்றி ஒருவன் தொடர்ந்து மோசமாக பேசி வருகிறான். அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவனை கூப்பிட்டு சினிமாவில் நடிக்க வைக்கிறார்கள். அவரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இவர்களின் வீரம்.

ஒரு விஜய் ரசிகர் youtube சேனல் வைத்திருந்தால் அஜித் படத்தை மோசமாக விமர்சிப்பார். ஒரு அஜித் ரசிகர் youtube சேனல் வைத்திருந்தால் அவர் விஜய் படத்தை மோசமாக விமர்சிப்பார். இதுபற்றி வேண்டுமானாலும் நாம் பேசலாம். ஆனால் பொதுவாக சினிமாவை விமர்சனம் செய்பவர்களை நாம் குற்றம் சொல்ல முடியாது. படம் நன்றாக இருந்தால் அவர்கள்தான் அந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள்.
வடிவேலு ஒரு விஷக்கிருமி. அவரால் அழிந்த தயாரிப்பாளர்கள் பலரும் இருக்கிறார்கள். அவர்களிடம் போய் நேரில் கேட்டால் எல்லாம் சொல்வார்கள். வடிவேலுக்கு இதுபற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. யூடியூபில் மோசமாக விமர்சனம் செய்ததால்தான் அவர் நடிக்கும் படங்கள் ஓடுவதில்லை என அவர் நினைக்கிறார். ஆனால் அது உண்மை இல்லை. படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பார்கள்’ என பிஸ்மி பேசியிருக்கிறார்.