Connect with us
bluesattai

Cinema News

96 Prem: சல்லிபயல் நியாபகம் இருக்கா? ப்ளாஷ்பேக் சொல்லி ‘96’ பிரேம் வாயை மூடிய புளூசட்டை மாறன்

96 Prem:

சில தினங்களுக்கு முன்பு 96 பட இயக்குனர் பிரேம்குமார் paid reviewers குறித்து கடுமையாக தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்திருந்தார். அதாவது சில youtube விமர்சனங்கள் திட்டமிட்டே படங்களை குறை சொல்லி முதல் வார வசூலை பாதிக்க முயற்சி செய்கிறார்கள் என்றும் அதன் பிறகு தயாரிப்பாளர்களை அணுகுகிறார்கள் என்றும் youtube ஆன்லைன் விமர்சகர்கள் மீது அவர் குற்றம் சாட்டினார். அது மட்டுமல்ல இன்று வெளியாகும் 90 சதவீத விமர்சனங்கள் அனைத்துமே பணம் வாங்கி விமர்சனம் செய்யப்படுபவையாக இருக்கின்றன எனவும் உண்மையான விமர்சனகளின் குரல்கள் வெளியே வருவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ப்ளாஷ்பேக் இதோ:

அது மட்டுமல்ல அருவருப்பான மொழியிலும் சில விமர்சனங்கள் பேசப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். எனவே அந்த மாதிரி விமர்சனங்களுக்கு ஒரு கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருந்தார். மேலும் அந்த மாதிரி ரிவ்யூவர்ஸை மனநலம் பாதித்தவர்கள் என்றும் அவர் சொல்லி இருந்தார். இதைப் பற்றி முக நூலில் ஒருவர் பிரேம்குமார் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்ததை புளூசட்டை மாறன் தனது பதிவில் ஷேர் செய்துள்ளார்.

96 திரைப்படம் மூலமாகத்தான் பிரேம்குமார் வெளியே தெரிய ஆரம்பித்தார். அந்த படம் வெளியாவதற்கு முதல் நாள் இரவு பெரிய பஞ்சாயத்தில் சிக்கியிருந்தார் அந்த படத்தின் தயாரிப்பாளர். அந்தப் படத்தை ரிலீஸ் பண்ணவே முடியாது என்ற ஒரு கஷ்டத்தில் தான் இருந்தார். அப்போது விஜய் சேதுபதி அவருடைய சம்பளத்திலிருந்து ஒரு மிகப்பெரிய தொகையை விட்டுக் கொடுத்தார்.

தேறாதுனு சொன்ன படத்தை ஓட வைத்த ரிவியூவர்ஸ்:

இந்த படம் தேறவே தேறாது என்று டிஸ்ட்ரிபியூட்டர் சைடில் இருந்து சொல்லப்பட்டது. மறுநாள் படத்தை ரிலீஸ் செய்தார்கள். ஆனால் படத்தை பற்றி மக்களிடம் எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமோ இல்லாமல் தான் இருந்தது. வழக்கம் போல படத்தைப் பார்க்க ரசிகர்கள் சென்றனர். ஃபர்ஸ்ட் ஷோ முடிந்த உடன் மக்களை விட ரிவியூவர்ஸ் அனைவரும் சொல்லி வைத்தார் போல படத்தை கொண்டாடி தீர்த்தார்கள். இப்படி ஒரு படம் தமிழில் அபூர்வம் ,குறிஞ்சிப்பூ என்றெல்லாம் விமர்சனத்தில் எழுதினார்கள்.

அந்த ரிவ்யூவுக்கு அப்புறம்தான் மக்கள் கூட்டம் அதிகமாகிறது. இரண்டு நாளில் அந்த படம் மிகப்பெரிய கலெக்ஷனை பெற்றது .இன்னொரு பக்கம் ராட்சசன் திரைப்படமும் பயங்கரமாக ஓடியது. இரண்டு படத்திற்கும் எந்த ஒரு நெகட்டிவ் ரிவ்யூவும் விமர்சகர்களிடம் இருந்து வரவில்லை. ஒரே மாதிரியான ரிவ்யூவைதான் கொடுத்தார்கள். அவ்வளவு நெருக்கடியில் இருந்த தயாரிப்பாளர் படத்தின் வெற்றியால் ஆசுவாசமடைந்தார். படம் மிகப்பெரிய வெற்றி. இந்த ஹிட்டுக்கு அடுத்த நாளே படத்தின் இயக்குனர் பிரேம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

சல்லிபயல்:

வரிசையாக பேட்டிகள் கொடுத்தார். இந்த படத்தை விமர்சகர்கள் தான் ஆஹா ஓஹோனு எழுதி மக்களிடம் போய் சேர்த்தார்கள். ரிவ்யூவர்ஸ் இல்லை எனில் இந்த வெற்றி சாத்தியமே இல்லை என்று சொன்னார் பிரேம். அவர்களை கடவுள் போல பார்க்கிறேன் என்றும் கூறியிருந்தார். அன்னைக்கு இதே ரிவ்யூவர்ஸ் தான் அவ்வளவு நல்லவங்களாக தெய்வமாக தெரிந்தார்கள்.

அப்படி பேசிய பிரேம் தான் இன்றைக்கு ரிவ்யூவர்ஸை மனநலம் பாதிச்சவங்க என சொல்லி இருக்கிறார். எழுத்தாளர் ஜி நாகராஜன் மனிதர்களைப் பற்றி ஒரு மிகப் பிரபலமான quote ஒன்றை சொல்லி இருப்பார். அது என்னவெனில் மனிதன் ஒரு மகத்தான சல்லி பயல் என சொல்லி இருப்பார். அதுதான் ஞாபகத்திற்கு வருது என அந்த நபர் முக நூலில் பதிவிட்டுள்ளார். இதை ப்ளூசட்டை மாறன் எக்ஸ் தள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top