Connect with us
og

latest news

OG Review: பவன் கல்யாண் ரிட்டர்ன் பில்டப்லாம் சரி… படத்தில எங்க பாஸ் கதை?…

OG Review: பவன் கல்யாண் நடிப்பில் பல மாத காத்திருப்புக்கு பின்னர் வெளியாகி இருக்கும் ஓஜி படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் படத்தின் விமர்சனம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. 

OG கதை: 

1990களில் மும்பையில் நடக்கும் கதை. சத்யா டாடா என்ற கேரக்டரில் போர்ட் உரிமையாளராக நடித்து இருக்கிறார் பிரகாஷ் ராஜ். அவரை எதிர்க்க தேஜ் சப்ரு மற்றும் சுதேவ் நெயர் எதிரியாக உள்ளே வருகின்றனர். அந்த நேரத்தில் வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட கண்டெய்னர் காணாமல் போகிறது. 

இந்த நேரத்தில் சுதேவ் நெயரால் சத்யாவின் இளைய மகன் கொல்லப்படுகிறார். அந்த கண்டெயனரை தன் வசமாக்கும் பிரச்னையில் உள்ளே வருகிறார் இம்ரான் ஹஸ்மி. இதனால் இரு டீமுக்கும் பிரச்னை வெடுக்கும் போது ஓஜாஸ் கம்பீரா (OG) என்ற கேரக்டரில் பவன் கல்யாண் உள்ளே எண்ட்ரி ஆகிறார். 

ஓஜியாக மும்பைக்கு திரும்புகிறார். OG யார், ஏன் அவர் மறைந்தார், சத்தியா டாடாவுடன் அவருக்கு இருக்கும் உறவு என்ன என்பதுதான் படத்தின் மொத்த கதையாக இருக்கிறது.

நடிகர்களின் நடிப்பு:

OG என்ற பெயருக்கு ஏற்ப பவன் கல்யாண் நடிப்பில் மாஸ் காட்டி விடுகிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் இவருக்கு நிகர் யாருமே இல்லை என்ற அளவு சிலிர்க்க விடுகிறார். அவருடைய பிரசனமே சாதாரண சீனுக்கே மாஸ் கொடுக்கிறது. ஹரி ஹர வீர மல்லு படத்தினை விட இது சரியான கம்பேக்.

og
og

தெலுங்கில் அறிமுகமாகி இருக்கும் இம்ரான் ஹஸ்மி தெறிரகம். பவன் கல்யாண் மனைவியாக வரும் பிரியங்கா மோகன் சில காட்சிகள் வந்தாலும் தரமான நடிப்பை கொடுத்து இருக்கிறார். பெரும்பாலும் எல்லா கதாபாத்திரங்களுமே நடிப்பால் அசத்தி விடுகின்றனர். 

பிளஸ் மற்றும் மைனஸ்:

படத்தில் பவன் கல்யாண் வரும் காட்சிகள் எல்லாம்  பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்காக தமன் அமைத்திருக்கும் இசையும் க்ளாப்ஸ் வாங்குகிறது. வில்லனாக இம்ரான் அறிமுகமாகும் காட்சிகள் பரபரப்பின் உச்சமாகவே அமைந்திருக்கிறது. ஜாக்கி ஷெராபின் கேமியோ படத்திற்கு பிளஸ்.

இருந்தும் பல வருடங்களாக அரைத்த மாவையே அரைக்கும் கதையாக இப்படத்திலும் பெரிய அளவில் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை. முதல் பகுதி விறுவிறுப்பாக அமைந்தாலும் இரண்டாம் பகுதியில் எப்போதும் போல சலிப்பை தட்டி விடுகிறது. தேவையில்லாத நீண்ட காட்சிகள், சரியான அமைப்பு இல்லாத கதாபாத்திரங்கள் என ரசிகர்களிடம் பொறுமையை சோதிக்கிறது.

அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் ஒற்றை ஆளாக பவன் கல்யாண் செய்யும் சாகசம். இது சூப்பர் ஹீரோ படத்திற்கு சாதகமாக அமைந்தாலும் சாதாரண கேங்ஸ்டர் படத்திற்கு நெருடல் ஆகவே அமைக்கப்பட்டு இருக்கிறது.

இயக்கம்

அஜித் குமாருக்கு ஒரு குட் பேட் அக்லி திரைப்படத்தை கொடுத்தது போல இயக்குனர் சுஜீத் பவன் கல்யாணை பெருமை பேசவே மொத்த படத்தையும் இயக்கி இருக்கிறார். முன்பு சொன்னது போலவே ஆக்ஷன் காட்சிகள் ஈடு கொடுத்தாலும் படத்தில் எந்தவித கதையும் இல்லை.

பவன் கல்யாணின் நடிப்பை போல தமனின் இசையும் படத்திற்கும் மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. நீங்கள் பவன் கல்யாண் ரசிகர்களாக இருந்தால் படத்தை எட்டிப் பாருங்கள் இல்லையென்றால் தப்பித்துக் கொள்ளுங்கள். 

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top