
Cinema News
Idlikadai: 2000 செலவு பண்ணி கூட படத்த பாத்துடுறேன்.. தனுஷ் மேடை பேச்சால் கடுப்பான ரசிகர்கள்
Idlikadai:
தனுஷ் நடிப்பில் அக்டோபர் ஒன்றாம் தேதி திரைக்கு வெளியாக கூடிய திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். படத்தில் ராஜ்கிரன், பார்த்திபன், அருண் விஜய், சமுத்திரக்கனி என பல பிரம்மாண்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். ஏற்கனவே இவர்கள் காம்போவில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பை பெற்றது.
எரிச்சலடைய வைத்த தனுஷ்:
மீண்டும் இந்த படத்தின் மூலம் இருவரும் இணைந்துள்ளனர். படத்தின் ப்ரோமோஷனுக்காக பல ஊர்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார் தனுஷ். நேற்று மதுரையில் படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழாவில் பார்த்திபன், அருண் விஜய் என முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது தனுஷ் பேசிய பேச்சு ரசிகர்களிடம் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுவாக ரசிகர்களின் நலன் கருதியும் பெற்றோர்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை பற்றியும் முக்கியமாக படிப்பை பற்றியும் பல நேரங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறார். ஆனால் சமீபகாலமாக அவர் மேடையில் பேசும்பொழுது தன் குடும்பம் எவ்வளவு கஷ்டப்பட்டது? ஒரு ரூபாய் கூட இல்லாமல் நாங்கள் எந்த அளவு கஷ்டப்பட்டோம் என தன்னுடைய வறுமையின் துயரத்தை பற்றி பேசி வருகிறார்.
கட்டுக்கதை:
இது எப்படி சாத்தியம் என்ற வகையில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனெனில் தனுஷ் பிறக்கும்போது அவருடைய அப்பா சினிமாவில் ஒரு இயக்குனராக பணிபுரிந்து வந்தவர். அப்படி இருக்கும் பொழுது எப்படி இவர் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு இருப்பார் என யோசிக்க தோன்றியது. அதேபோல்தான் நேற்று நடந்த மதுரை நிகழ்ச்சியிலும் அவர் ஒரு கதையை கூறியிருந்தார். அதாவது எங்க அப்பா பொழப்ப தேடி சென்னைக்கு வர முடிவு செய்தார்.
ஆனால் அந்த சமயத்தில் அவர் கிட்ட காசு கிடையாது. மதுரையில தெரிஞ்சவங்க ஒருத்தர் கிட்ட காசு வாங்கி சென்னைக்கு போலாம்னு நினைச்சாரு. ஆனால் மதுரைக்கு வரவும் எங்க அப்பா கிட்ட காசு கிடையாது. அம்மாவும் அப்பாவும் ஊர்ல இருந்து 120 கிலோமீட்டர் நடந்தே தான் மதுரைக்கு வந்தாங்க. அந்த நேரத்தில் அம்மாவுக்கு மூணு மாசம் கர்ப்பமாக இருந்தார்.
அதெப்படி திமிங்கலம்?:
செல்வராகவனுக்கு நாலு வயது. மூன்று பேருமே 120 கிலோமீட்டர் நடந்ததே வந்தார்கள் என்ற ஒரு கதையை கூறினார். இதை கேட்ட ரசிகர்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் தனுஷை வச்சு செய்து வருகின்றனர். அது எப்படி திமிங்கலம் ?தேனியில் இருந்து மதுரைக்கு 75 கிலோ மீட்டர் தான். இவர் சொல்கிற 120 கிலோமீட்டர் எப்படி சாத்தியமாகும் என கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
இன்னும் சிலர் படம் எடுக்கிறத தாண்டி அதை விளம்பரப்படுத்த இவனுக படுற பாடு இருக்கே? யப்பா டேய்.. 2000 செலவு பண்ணி கூட உங்க படத்தை பார்த்து விடுகிறோம். ஆனால் மேடைக்கு மேடை படத்துக்கு படம் ஏதாவது இப்படி சொல்லி எங்கள கடுப்படைய வைக்காதீங்க என்றும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் அந்த நேரத்தில் தேனி மதுரை பேசஞ்சர் ட்ரெயின்ல இலவசமாகவே வரலாம். பெரிய கெடுபிடி எல்லாம் கிடையாது. இப்பவும் அந்த ட்ரெயின் போகுது. தேனிக்கு பத்து ரூபாய் தான் டிக்கெட் என்று தனுஷை வச்சி செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.