
Cinema News
அப்ப இனிச்சது.. இப்ப கசக்குதா?!.. மெய்யழகன் இயக்குனரை போட்டு பொளக்கும் விமர்சகர்கள்!..
Premkumar: பிரேம்குமார் இயக்கத்தில் 2018ம் வருடம் வெளியான திரைப்படம் 96. இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். பள்ளியில் படிக்கும் காலகட்டத்தில் ஒரு பெண்ணின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு, காலங்கள் ஓடிய பின் அவர்கள் மீண்டும் சந்திக்கும் போது என்ன நடந்தது? என்பதை இப்படம் பேசியது. ஒரு நாவலைப் போல படத்தை உருவாக்கி இருந்தார் பிரேம்குமார். 70,80 கிட்ஸ்கள் இந்த படத்தோடு தங்களை கனெக்ட் செய்து கொண்டார்கள். ஏனெனில் அந்த படத்தில் வந்த பல காட்சிகள் அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களாக இருந்தது. அதுவே அந்த படத்தை வெற்றியடையவும் வைத்தது.
மெய்யழகனில் அது மிஸ்ஸிங்:
அதன்பின் கார்த்தி, அரவிந்த்சாமி ஆகியவரை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கினார் பிரேம். ஆனால் இந்த படம் 96 அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. எனவே இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில்தான் ஊடகம் ஒன்றில் பேசிய பிரேம்குமார் ‘மெய்யழகன் படத்தை நான் மலையாளத்தில் எடுத்திருந்தால் தமிழ் சினிமா ரசிகர்கள் அதை கொண்டாடியிருப்பார்கள். தமிழில் எடுத்ததுதான் தவறு என என் நண்பர்கள் சொன்னார்கள்.
ஓடிடியில் கிடைத்த வரவேற்பு:
அதே நேரம் ஓடிடியில் வெளியான போது எனக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தது. ஓடிடியில் படம் பார்த்துவிட்டு பலரும் விமர்சனங்களை பார்த்துவிட்டு படத்தை தியேட்டரில் பார்க்காமல் மிஸ் பண்ணி விட்டோம் என்ன சொன்னார்கள். இந்த படத்தை காலி செய்தது விமர்சகர்கள்தான். அவர்களுக்கு ஏதோ மனநல பிரச்சனை. ஆனால் நான் விமர்சனங்களை பார்த்து பயப்படவில்லை’ என பேசியிருந்தார்.

இதையடுத்து டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பல சினிமா விமர்சகர்கள் பிரேமுக்கு எதிராக கருத்து சொல்லி வருகிறார்கள். 96 படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது விமர்சகர்கள்தான். அந்த படத்தை பற்றி நிறைய பேர் பேஸ்புக்கில் ரைட் அப் எழுதினார்கள். அதோடு, 96 படத்தில் வந்த காட்சிகள் பலரின் வாழ்க்கையோடு ஒன்றி இருந்தது. ஆனால் மெய்யழகன் படத்தில் அப்படி எதுவும் இல்லை. அரவிந்த்சாமி, கார்த்தி கதபாத்திரங்கள் யாருடைய வாழ்க்கையிலும் நடந்தது இல்லை. அதுதான் அந்த படத்தின் பெரிய பலவீனம்.
படத்தின் மைனஸ்:
அதோடு ‘நீ யார் என எனக்கு தெரியவில்லை’’ என அரவிந்த்சாமி கார்த்தியை பார்த்து சொல்லிவிட்டால் ஒரு நிமிடத்தில் முடிந்துவிடும் திரைக்கதையை மெலோ டிராமாவாக மூன்று மணி நேரம் படமாக எடுத்திருந்தார் பிரேம். அதனாலதான் தியேட்டரில் படத்தைப் பார்த்த பலரும் அயற்சி அடைந்தனர். அதுவும் படம் மொக்கை என யாரும் சொல்லவில்லை. நீளத்தை குறைக்க சொன்னார்கள்.
மேலும், தியேட்டரில் பார்க்கும் அனுபவம் வேறு. வீட்டில் ஓடிடியில் பார்ப்பது வேறு. வீட்டில் பொறுமையாக பார்க்கலாம். போர் அடிக்கும் காட்சிகளை ஃபார்வேர்ட் செய்துவிட்டு பார்க்கலாம். அதனால்தான் பலருக்கும் ஓடிடியில் பார்த்த போது அந்த படம் பிடித்திருந்தது. இதை பிரேம் புரிந்து கொள்ள வேண்டும். 96 படத்தை பற்றி பேசி எழுதி அதை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது விமர்சகர்கள்தான். அப்போது அவர்களை கடவுள் என பேசினார். இப்போது அவர்களை திட்டுகிறார்’ என பிரமை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.