
Cinema News
முகத்தில் துணியை சுற்றிக்கொண்டு ஓடி ஒளியும் kpy பாலா… உமாபதி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..
சர்ச்சை நாயகன் பாலா :
Kpyபாலா ஒரு சர்வதேச கைக்கூலி. இவரால் தமிழ்நாட்டுக்கு பேராபத்து வரப்போகுது என்று சமீபத்தில் பத்திரிக்கையாளர் உமாபதி அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டார். அதற்கு பதில் சொல்லும் விதமாக கேபிஒய் பாலாவும் வீடியோவை வெளியிட்டார்.
’நான் சர்வதேச கைக்கூலி கிடையாது நான் ஒரு தின கூலி. ஒரே ஒரு படம் தான் நடித்தேன் அதற்கு இவ்வளவு பிரச்சினைகளைக் கொண்டு வருவீர்களா?’ என்று பதில் அளித்திருந்தார். இந்நிலையில் பத்திரிக்கையாளர் உமாபதியும் பாலாவைப் பற்றிய பல திடுக்கிடும் தகவல்களை ஆதாரத்துடன் சொல்லி வருகிறார்.
ஒடி ஒளியும் பாலா :
அந்த வகையில் பாலா உண்மையாகவே தன் மீது எந்த தவறும் இல்லை என்றால் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்படுத்தலாமே எதற்கு முகத்தை மூடிக்கொண்டு ஓடி ஒளிகிறார் என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அவர் கூறியதாவது,” இன்று சோசியல் மீடியா என்பது மிகவும் ஆபத்தான ஒன்று. சமீபத்தில் நேபாளத்தில் பாலாவைப் போன்ற சாதாரண மனிதன்தான் அந்த நாட்டு கலவரத்திற்கு காரணமானார்”.
சோசியல் மீடியா ஆபத்து :
”சோசியல் மீடியா நினைத்தால் ஒரு நாட்டையே அழிக்கும் பவர் அதனிடம் இருக்கிறது. நவீன காலத்தில் ஆயுதத்தை விட கொடுமையானது இந்த சோசியல் மீடியா. ரத்தமும் சதையும் கீறலும் இல்லாமல் எதிரியை மிக சுலபமாக முடித்து விடலாம்”.
”இன்று பாலா குரல் கொடுத்தால் சுமார் 10,000 பேரை கூட்ட முடியும். தற்பொழுது பாலாவையும் சிலர் அப்படித்தான் உருவாக்கிக் கொண்டு வருகிறார்கள். இதிலிருந்த பாலாவை மீட்டு வர முடியுமா? என்றால் அதற்கு ஓரு வழி இருக்கிறது. இதையெல்லாம் நிப்பாட்டி விட்டு பாலா தற்போது சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கி விட்டார் அதை அப்படியே continue பண்ணா நல்லா இருக்கும்”.
அரசாங்கத்தை அவமதித்த பாலா :
”இந்த உதவிகளை எல்லாம் யாருக்கும் தெரியாமல் அவர் சம்பாதித்த பணத்தில் செய்தால் மிகவும் பிரயோஜனமாக இருக்கும். 2021-க்கு அப்புறம் பாலா ஆம்புலன்ஸ் வாங்கி கொடுக்க ஆரம்பித்தார். அதுவும் கிராமப்புறங்களில் இந்த சேவையை தொடங்கி வைத்தார். 1437 ஆம்புலன்ஸ் தமிழ்நாடு கவர்மெண்ட் கீழ் ஓடிக்கொண்டிருக்கிறது. பாலா இப்படி செய்திருப்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு அரசாங்கத்தை அவமதிப்பதற்கு சமம்”.
பாலா மீது சந்தேகம் :
’108 க்கு போன் போட்டால் தேவைப்படும் இடங்களுக்கு நொடி பொழுதில் வண்டி வந்து விடும். அதையெல்லாம் விட்டுவிட்டு இவர் வாங்கி கொடுத்த ஆம்புலன்ஸ் தான் மக்களின் உயிரை காப்பாற்றுமா? இதில் கொடுமையும் கொடுமை என்னவென்றால் ஆட்டோ ஆம்புலன்ஸ் தான். அதற்கு rc book, இன்சூரன்ஸ் கிடையாது. இப்படி இருக்கும்போதுதான் பாலா மீது சந்தேகம் ஏற்படுகிறது.
”மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். நான் பாலாவை மிக மோசமானவனாக சித்தரிக்கவில்லை. இந்த பிரச்சனைக்கான ஒரே தீர்வு பாலா கார்ப்பரேட் கம்பெனியுடன் சேர்ந்து உதவி செய்வதை நிறுத்த வேண்டும் என்பதுதான்”. என்று கூறியுள்ளார்.