
Cinema News
Karuppu: கருப்பு படத்தில் ஹீரோ சூர்யாவா?.. ஆர்.ஜே.பாலாஜியா?.. என்னப்பா புதுசா கிளப்புறீங்க?!..
நடிகர் சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாகவே சூப்பர் ஹிட் படங்கள் அமையவில்லை. சிங்கம் 2க்கு பின் அவர் நடித்த பல படங்கள் ஓரளவுக்கு வசூலை பெற்றாலும் மெகா ஹிட் அடிக்க வில்லை. அவர் நடிப்பில் வெளிவந்த கங்குவா திரைப்படம் பெரியளவு புரமோஷன் செய்யப்பட்டு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெறாமல் போனது.
அதன்பின் வெளியான ரெட்ரோ திரைப்படமும் சூப்பர் ஹிட் அடிக்க வில்லை. அதன்பின் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்கிற திரைப்படத்தில் நடித்தார் சூர்யா. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். அதோடு ஆர்.ஜே. பாலாஜியும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் படம் மிகவும் கமர்சியலாகவும், வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து மசாலாக்களும் இந்த படத்தில் தூவப்பட்டிருப்பது தெரிந்தது. டிரெய்லரை பார்க்கும்போதே கண்டிப்பாக கருப்பு திரைப்படம் சூர்யாவுக்கு ஒரு ஹிட் படமாக அமையும் என பலராலும் கணிக்கப்பட்டது.
ஆனால் தயாரிப்பாளருடன் இயக்குனருக்கு ஏற்பட்ட பிரச்சனை, திரிஷாவுடன் பாலாஜிக்கு ஏற்பட்ட மனக்கசப்பு, இன்னும் 15 நாட்கள் ஷூட்டிங் நடத்த வேண்டி இருப்பது, இந்த படத்தின் ஓடிடி உரிமை இதுவரை விற்கப்படாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் செய்தியை இதுவரை படக்குழு அறிவிக்கவில்லை. ஒரு வழியாக 2026 ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஆனால் இன்னும் படக்குழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில்தான் ஒரு புதிய செய்தி வெளியே கசிந்திருக்கிறது. இந்த படத்தில் சூர்யாவை விட ஆர்.ஜே பாலாஜிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை இது உண்மையாக இருந்தால் சூர்யா அதை எப்படி ஏற்றுக் கொள்வார் என்பது தெரியவில்லை.
முழு படமாக பார்க்கும் போது சூர்யா அதில் தலையிட்டு சில காட்சிகளை நீக்க சொல்லவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். அதேநேரம் கதைக்கு அது தேவை எனில் சூர்யா அதில் தலையிட மாட்டார் எனவும் சொல்கிறார்கள். சூர்யா என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.