
Cinema News
Jananayagan: ஆடியோ லான்ச்சுக்கு தேதி குறிச்சாச்சி!.. ஆனாலும் விஜய் ரசிகர்களுக்கு அல்வாதான்!…
கோட் படத்தில் நடித்து கொண்டிருந்தபோதே தான் அரசியலுக்கு வரப்போவதாக விஜய் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி தற்போது முழுநேர அரசியல்வாதியாகவும் அவர் மாறிவிட்டார். அதோடு தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு சனிக்கிழமையும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவரின் அரசியல் வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது பலரும் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால் எதற்கும் அவர் பதில் சொல்வதில்லை.
தெலுங்கு படத்தின் ரீமேக்:
கோட் திரைப்படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் ஜனநாயகன். தெலுங்கில் பாலையா நடித்து ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என சொல்லப்பட்டாலும் தமிழுக்கு ஏற்றவாறு பல மாற்றங்களை படத்தில் செய்து இருக்கிறார்கள். குறிப்பாக விஜய் அரசியல்வாதியாக மாறிவிட்டதால் இந்த படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகளும் வருகிறது.
ஜனநாயகன் திரைப்படம் 2026 பொங்கல் விருந்தாக ஜனவரி 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸுக்கு மூன்று மாதம் இருப்பதால் பட வேலைகளை ஹெச்.வினோத் பொறுமையாகவே செய்து வருகிறார். ஒருபக்கம் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் விஜய் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் அவர் நடித்துள்ள கடைசி திரைப்படத்தின் விழா இது.

விஜய் பட ஆடியோ லான்ச்:
பொதுவாக விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா என்றால் அது பரபரப்பை கிளப்பும். ஏனெனில் அந்த மேடையில் விஜய் என்ன அரசியல் பேசப் போகிறார் என அவரின் ரசிகர்கள் வெறிகொண்டு எதிர்பார்ப்பார்கள். கடந்த சில வருடங்களாகவே விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்தது. ஆனால் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடக்கவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இந்நிலையில், மலேசியாவில் உள்ள புத்திர ஜெயா என்னும் இடத்தில் உள்ள ஸ்டேடியத்தில் இந்த விழா நடக்கவிருப்பது தெரியவந்திருக்கிறது. வருகிற டிசம்பர் 27ம் தேதி ஜனநாயகன் படத்தின் ஆடியோ லான்ச் அந்த அரங்கில் நடைபெறவிருக்கிறது. அதேநேரம் படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக இதை அறிவிக்கவில்லை/ ஏனெனில் இன்னும் கால நேரம் இருக்கிறது.
விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்:
விஜய் படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நடந்தால்தான் அவர்களின் ரசிகர்களுக்கு அது கொண்டாட்டமாக இருக்கும். அதுவும் Janayagan அவரின் கடைசிப்படம். எனவே, இது அவர்களுக்கு ஏமாற்றமான செய்திதான். அதேநேரம் இந்த படத்தை மிகவும் கமர்சியலாக உலக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவே இப்படத்தின் ஆடியோ லான்ச்சை மலேசியாவில் திட்டமிட்டிருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் இது விஜய் ரசிகர்களுக்கு சோகம் தான்!..