
Cinema News
சினிமாவை விட்டு போனாலும் பொழச்சுக்குவேன்.. உஷாரா இருக்கும் சிவகார்த்திகேயன்..
நம்பிக்கை நட்சத்திரம் :
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். டிவி நிகழ்ச்சியில் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் இன்று தமிழ் சினிமா நடிகர்களின் top-5 பட்டியில் இணைந்துள்ளார். கோட் படத்தில் விஜய் துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்ததிலிருந்து ரசிகர்கள் தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக சிவகார்த்திகேயனை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
அதன் காரணமாக ’அமரன்’ பிரம்மாண்ட வெற்றி கொடுத்தது. ஆனால் அதன் பிறகு வெளியான ’மதராஸி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று சுமாரான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் சமீபத்தில் பொது விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் தனது retirement plan மற்றும் கல்வி எவ்வளவு முக்கியம் என்பது குறித்து பேசி உள்ளார்.
சிவா retirement plan :
மேலும் அதில், “கேடில் விழு செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்ற அவை என்று திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார். உலகத்தில் எல்லாத்தையும் விட பெரிய செல்வம் கல்வி. இங்கு பல பேர் ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பள்ளிக்கூடத்திற்கு சென்று அங்கு கிடைக்கும் உணவை உண்டு படித்து வருகிறார்கள்”.
”நான் மூன்று வேலையும் சாப்பிட்டு தான் பள்ளிக்கூடத்திற்கு போனேன். அதற்கு காரணம் என் அப்பா ஒருவேளை சாப்பிட்டு தான் பள்ளிக்கூடத்துக்கு போனதால். நான் ஆட்டோ, bus, train-ல் பயணம் செய்து பள்ளிக்கூடத்திற்கு சென்றேன். ஆனால் என்னுடைய அப்பா கால்நடையாக நடந்து பள்ளிக்கூடத்திற்கு போனதால் தான். எதற்கு இதை சொல்கிறேன் என்றால் ஒரு தலைமுறையில் ஒருத்தர் படித்தால் அதற்கு அடுத்து வருகிற தலைமுறையெல்லாம் நன்றாக இருக்கும்”.
2 டிகிரி வச்சிருக்கேன் :
இதை என் குடும்பத்தில் இருந்து நான் பார்க்கிறேன். என்னுடைய அப்பா நினைச்ச படிப்பை படிக்க முடியல, கிடைச்ச படிப்பை தான் படிச்சாரு. அப்படி இருந்தும் அவர் ஒரு டிகிரி முடிச்சிருந்தாரு. ஆனா அவர் பையன் தான் இரண்டு டிகிரி முடித்திருக்கிறேன். நான் B.E & MBA படித்திருக்கிறேன் ஆனால் நான் படித்ததற்கும் நான் இப்பொழுது வேலை செய்த துறைக்கும் சம்பந்தமே இருக்காது.
நான் நடிச்சுக்கிட்டு இருக்கும்போது இப்ப இருக்கிற பெரிய நம்பிக்கை, இந்த cinema industry ரொம்ப ரொம்ப சவாலானது. எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் இந்த ஒரு துறைக்கு உள்ளே நுழைவது அசாத்தியமான விஷயம். அப்படி எனக்கு சவால் வரும் போதெல்லாம் எனக்கு துணையாக இருப்பது என்கிட்ட 2 degree இருக்கு.
life-ல ஜெயிக்க இதை பண்ணுங்க :
நாளைக்கு நான் இந்த சினிமா இண்டஸ்ட்ரியை விட்டு போனாலும் அந்த டிகிரியை வைத்து நான் எங்கேயோ வேலை செஞ்சு பொழச்சுப்பேன். நான் கொஞ்சம் decent-டா படிச்சேன். சினிமா மீது எனக்கு ஆர்வம் இருந்ததால் நான் இந்த பக்கம் வந்து விட்டேன். life-ல நீங்க ஜெயிக்கணும்னா, வீடு வாங்கணும்னா, கார் வாங்கணும்னா, அப்பா அம்மாவ நல்லா பாத்துக்கணும்னா, எல்லாம் நல்லா இருக்கணும்னா அதற்கு one stop solution மாணவர்கள் நல்லா படிக்கணும் அவ்வளவுதான்.
“மார்க்குக்காக படிப்பதை விட்டுவிட்டு வாழ்க்கைக்காக படிக்க வேண்டும் நான் மார்க்குக்காக படித்தேன். வாழ்க்கைக்காக ஏதோ கத்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அதனால் மாணவர்கள் நன்கு படித்து வாழ்க்கையில் உயர என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கூறி இருந்தார்.
- இன்றைய காலத்து நடிகர்கள் நடித்துவிட்டு பணம் சம்பாத்திவிட்டு அவர்களுடைய வழியில் செல்லாமல் மாணவர்களை நல்வழி படுத்தும் வகையில் ஏதாவது உத்வேகத்தை அவர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.
- அதிலும் ஏழைகளுக்காக கல்வி கொடுக்கும் சிவகுமாரின் குடும்பம் தமிழ் சினிமா நடிகர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது.