
Cinema News
Swetha Mohan: சின்ன பையன் அனிருத்துக்கு விருது!.. என் அம்மாவுக்கு இல்லயா?!.. பொங்கிய பாடகி!…
Swetha Mohan: தமிழக அரசு சார்பில் பல துறைகளிலும் சேர்ந்தவர்களுக்கு கலைமாமணி விருது கொடுக்கப்பட்டு வருகிறது. பல நேரங்களில் அது சர்ச்சையாவதும் உண்டு. ஆனால் அதற்கெல்லாம் யாரும் விளக்கம் கொடுப்பதில்லை. 2021 முதல் 2023 ம் வருடங்களுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதில் பின்னணி பாடகி ஸ்வேதா மோகன், இசையமைப்பாளர் அனிருத், சாய் பல்லவி, எஸ்.ஜே சூர்யா, விக்ரம் பிரபு, இயக்குனர் லிங்குசாமி உள்ளிட்ட பலருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கலைமாமணி விருது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வேதா மோகன் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.
என் அம்மாவுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு கலைமாமணி விருது கிடைத்தது. தற்போது எனக்கும் கிடைத்திருக்கிறது. இது என்னை ஊக்குவிக்கிறது. தமிழக அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. அதேபோல் என்னைவிட சின்ன பையன் அனிருத்துக்கும் கலைமாமணி விருது கிடைத்திருக்கிறது.
எனக்கு ஒரு வருத்தம் என்னவெனில் என் அம்மா எவ்வளவோ பாடல்களை பாடி இருக்கிறார். அவருக்கு இதுவரை தேசிய விருது கொடுக்கப்படவில்லை. அது ஏன் எனக்கு தெரியவில்லை. தேர்வு குழு விருது பட்டியல் வரை என் அம்மாவின் பெயர் சென்று அதன்பின் விருது வழங்கப்படாமல் போயிருக்கிறது. நிறைய விஷயங்களல் அது நடக்கவில்லை. அவர் தேசிய விருதை பெற வேண்டும் என்பதை என் ஆசை என பேசி இருக்கிறார்.
ஸ்வேதாவின் அம்மா சுஜாதா மோகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பல பாடல்களை பாடியிருக்கிறார். ரோஜா படத்தில் இடம்பெற்ற சின்ன சின்ன ஆசை பாடலை இவர்தான் பாடினார். அதேபோல் நேற்று இல்லாத மாற்றம் என்னது உள்ளிட்ட பல இனிமையான பாடல்களையும் இவர் பாடியிருக்கிறார்.