">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
என் வாழ்க்கையின் சிறந்த முடிவு அதுதான் – கோலி பகிர்ந்த சீக்ரெட்!
இந்திய அணியின் கேப்டனும் உலகின் மிகவும் பிட்டான வீரருமான கோலி தன் ஏன் அசைவ உணவுப் பழக்கத்தில் இருந்து சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறியது ஏன் எனக் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் நடக்க இருந்த கிரிக்கெட் தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரரகள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் ரசிகர்களையும் தங்களையும் பொழுது போக்கிக் கொள்ளும் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் இந்திய அணியின் கேப்டனான கோலியை லைவ்வாக நேர்காணல் செய்தார்.
அப்போது கோலியிடம் பல கேள்விகளைக் கேட்ட பீட்டர்சன் கோலி ஏன் அசைவ உணவுப் பழக்கத்தில் இருந்து சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறினார் எனக் கேட்க, அதற்குப் பதிலளித்த கோலி ‘ 2018 ஆம் ஆண்டு எனது கழுத்து எலும்பில் வலி ஏற்பட்டு சோதனை செய்த போது எனக்கு யூரிக் அமிலம் அதிகமாக சுரப்பது கண்டறியப்பட்டது. அதனால் நான் சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறினேன். அதன் பின் அமிலம் சுரப்பது கட்டுப்பாட்டுகுள் வந்தது. உடலின் சமநிலைக்கு வந்தது. சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. என் வாழக்கையில் எடுத்த சிறந்த முடிவாக இதை நான் கருதுகிறேன். ஒவ்வொரு நாள் காலையிலும் புத்துணர்ச்சியாக எழுகிறேன். ஒரு போட்டியின் சோர்வில் இருந்து விரைவாக மீள முடிகிறது. டெஸ்ட் போட்டியின் சோர்வில் இருந்து ஒரே நாளில் என்னால் மீள முடியும்.’ எனக் கூறியுள்ளார்.
உலகளவில் உள்ள மிகவும் பிட்டான வீரர்களில் ஒருவராக விராட் கோலி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.