
Cinema News
Ajith Vijay: விஜயும் அஜித்தும் இதத்தான் பேசிட்டு இருப்பாங்க.. கரெக்டா நடக்குதுல? நடிகை சொன்ன சீக்ரெட்
Ajith Vijay:
தமிழ் சினிமாவில் எப்படி எம்ஜிஆர் – சிவாஜிக்கு பிறகு ரஜினியும் கமலும் பல சாதனைகள், வெற்றிகளை குவித்து வந்தார்களோ அவர்கள் வரிசையில் அடுத்து விஜயும் அஜித்தும்தான் இருக்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களை யாராலும் அசைக்க முடியவில்லை. முடி சூடா மன்னர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் விஜய் அஜித்துக்கு முன்பு பிரசாந்த் ஒரு டாப் ஹீரோவாக இருந்தார்.
ஆனால் பிரசாந்தும் அடுத்து பின்னுக்கு தள்ளப்பட்டு இருவரும் புகழின் உச்சிக்கு சென்றனர். விஜய் அஜித் என இரட்டையர்களாகவே சினிமாவில் வலம் வரத் தொடங்கினார்கள். இருவருமே ஆரம்பத்தில் காதல் மன்னர்களாக பல படங்களில் ரொமாண்டிக் ஹீரோக்களாக நடித்து பின் ஆக்ஷன் ஹீரோக்களாக மாறினார்கள். விஜய் கெரியரில் அவருடைய அப்பா முக்கிய காரணமாக திகழ்கிறார்.
டர்னிங் பாயிண்டாக அமைந்த படங்கள்:
முதலில் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்திலேயே பல படங்களில் நடிக்க தொடங்கிய விஜய் அதன் பிறகு முன்னணி இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்ற தொடங்கினார். பூவே உனக்காக திரைப்படம் அவரின் வாழ்க்கையை திருப்பி போட்ட திரைப்படமாக அமைந்தது. அஜித்துக்கும் அதே போல் ஆசை படம் ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. பூவே உனக்காக , காதல் கோட்டை போன்ற திரைப்படங்களுக்கு பிறகுதான் இருவரின் மாஸ் தெரிய ஆரம்பித்தது.
இந்த நிலையில் விஜய் இப்போது அரசியலில் மும்முரமாக இறங்கிவிட்டார். அவர் நடித்துக் கொண்டிருக்கும் ஜன நாயகன் திரைப்படம்தான் அவர் நடிக்கும் கடைசி படமாகும். இன்னொரு பக்கம் அஜித் பைக் ரேஸில் ஆர்வமாக இருக்கிறார். ஸ்பெயினில் நடக்க இருக்கும் கார் பந்தயத்தில் அஜித் கலந்து கொள்ள இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே அஜித்துக்கு ரேஸ் என்றால் பயங்கர ஆர்வம்.
பதிலடி கொடுக்கவா?
ஆனால் விஜயை பொறுத்தவரைக்கும் அரசியலுக்கும் தனக்கும் வெகு தூரம் என்று ஒரு பழைய பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் இப்போது அரசியலில் இறங்கி மற்ற கட்சிகளுக்கு ஒரு சவாலாக இருந்து வருகிறார் விஜய். இவருடைய அரசியல் வருகை அவரின் சுய நலத்திற்காகத்தான் என்றும் பல பேர் கூறி வருகிறார்கள்.ஏனெனில் தலைவா படத்தில் அவர் பட்ட கஷ்டம், மாஸ்டர் திரைப்படத்தின் போது ஐடி ரெய்டில் சிக்கியது என அரசியல் சார்ந்த பிரச்சினைகளில் சிக்கினார்.
அதனால் மனதளவில் மிகுந்த அழுத்தத்திற்கு ஆளானதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கவே அரசியலுக்கு வந்ததாகவும் கூறினார்கள். ஆனால் அவருடன் நடித்த சக நடிகை விஜயின் அரசியல் ஆசை என்பது இப்போது முளைத்தது இல்லை என்று கூறியிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை. நடிகை சுவாதி. விஜயுடன் செல்வா படத்தில் ஜோடியாக நடித்தார். அஜித்துடன் வான்மதி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார்.

சுவாதி சொன்ன சீக்ரெட்:
அந்த சமயத்திலேயே விஜயும் அஜித்தும் சுவாதியுடன் பேசும் போது அவர்களின் ஆசையை கூறியிருக்கிறார். விஜய்க்கு அரசியல் ஆர்வம் அப்பவே இருந்ததாம். அதே போல் அஜித்துக்கும் கார் ரேஸ் பைக் ரேஸில் ஆர்வம் இருந்ததாம். அதை இருவரும் இப்போது செயல்படுத்தி வருகிறார்கள். அதனால் அவர்களை பற்றிய இந்த சீக்ரெட் எனக்கு அப்பவே தெரியும் என சுவாதி கூறியிருக்கிறார்.