
latest news
Cook with Comali 6: இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கே? குக் வித் கோமாளி டைட்டிலை தட்டியது இவரா?
Cook with Comali 6: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6வது சீசன் இறுதி போட்டி நடந்து முடிந்திருக்கும் நிலையில் டைட்டில் வின்னர் குறித்த சுவாரஸ்ய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
கடந்த சீசனில் டல்லடித்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சரி செய்ய இந்த முறை நிறைய முயற்சிகள் எடுக்கப்பட்டது. புது தயாரிப்பு நிறுவனத்துடன் இரண்டாவது சீசன் என்பதால் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டது. இரண்டுக்கு மூன்று நடுவர்கள் வந்தனர்.
செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜுடன் செஃப் கௌஷிக்கும் உள்ளே வந்தார். வித்தியாசமான போட்டியாளர்களாலும் சூப்பர் டாஸ்குகளாலும் இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ச்சியாக யாரும் எதிர்பார்க்காத வகையில் எலிமினேஷன்கள் நடந்தது.
ஃபினாலே சென்ற போட்டியாளர்கள்
ஆரம்பத்தில் இருந்தே நன்றாக சமைத்த பிரியா ராமன், லட்சுமி ராமகிருஷ்ணன் முதல் பைனலிஸ்ட்டாக செல்லுவார்கள் என நம்பப்பட்டது. ஆனால் சின்னத்திரை நடிகை ஷபானா டிக்கெட் டூ பைனாலேவை வென்று உள்ளே சென்றார்.
அதை தொடர்ந்து நடந்த செமி பைனாலே போட்டியில் ராஜு வித்தியாசமான டிஷ்ஷை செய்து இரண்டாவது பைனாலிஸ்ட்டாக மாறினார். அதை தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன், உமைர் அடுத்த போட்டியாளர்களாக பைனாலேக்கு வந்துள்ளனர்.

அதிலும் ராஜு நிலையாக இல்லாமல் மாற்றி மாற்றி வெற்றியை தழுவி வந்தார். அவர் இரண்டாவது போட்டியாளராக பைனாலேக்கு வந்ததே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இறுதி போட்டியின் ஷூட்டிங் முடிந்து ரிசல்ட் லீக் ஆகி இருக்கிறது.
யார் அந்த போட்டியாளர்:
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் வின்னராக உமர் அல்லது லட்சுமி ராமகிருஷ்ணன் வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆச்சரியம் தரும் வகையில் டைட்டிலை தட்டி இருப்பது ராஜு எனக் கூறப்படுகிறது. அவருக்கு பரிசுத்தொகையாக 5 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
இதற்கு முன் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 டைட்டிலை ராஜு வென்று இருக்கிறார். இந்நிலையில் ஒரே போட்டியாளர் இரண்டு போட்டியிலும் டைட்டிலை தட்டியது அதுவும் விஜய் தொலைக்காட்சியில் இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.