
latest news
TVK Vijay: பிரெஸ்மீட் கொடுக்க மாட்டீங்களா?!.. ரிப்போர்ட்டர் கேள்விக்கு விஜய் கொடுத்த ரியாக்ஷன்!!..
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். இதற்குமுன் தனது பனையூர் அலுவலகத்தில் இருந்து மட்டுமே அரசியல் தொடர்பான வேலைகளை செய்து வந்த விஜய் முதல் முறையாக மக்களை சந்திக்க முடிவு எடுத்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று வருகிறார்.
மக்களிடம் பேசும்போது ஆளும் திமுக அரசை விஜய் கடுமையாக விமர்சனம் செய்து பேசி வருகிறார். அதேநேரம் அவர் அதிமுக உள்ளிட்ட சில கட்சிகளை விமர்சிப்பது இல்லை. அதேபோல விஜயை தொடர்ந்து மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வரும் சீமான் பற்றியும் அவர் எங்கும் பேசுவதில்லை.
அதேபோல் அரசியல்வாதி ஆன பின்னரும் விஜய் செய்தியாளர்களை சந்திப்பது இல்லை. பொதுவாகவே அரசியலுக்கு வந்து விட்டால் தினமும் செய்தியாளர்களை சந்திப்பார்கள். ஆளும் கட்சியாக இருந்தால் எதிர்க்கட்சியையும், எதிர்க்கட்சியாக இருந்தால் ஆளும் கட்சியையும் குறை சொல்வார்கள். அரசியல் தலைவர்களை விமர்சிப்பார்கள்.

ஆனால் விஜய் வீட்டில் இருந்து கிளம்பினால் அரசு அனுமதி கொடுக்கும் இடத்திற்கு வேனில் வந்து 15 முதல் 20 நிமிடம் முறை பேசுகிறார். அதன்பின் அங்கிருந்து கிளம்பி சென்று விடுகிறார். அரசியல்வாதி ஆன பின்னரும் அவர் செய்தியாளர்களை சந்திப்பதை தொடர்ந்து மறுத்து வருகிறார்.
திருச்சிக்கு வந்தபோது அவர் அமர்ந்திருந்த வேனுக்குள் செய்தியாளர்கள் மைக்கை உள்ளே நீட்டிய போது கதவை மூடிக்கொண்டார். இந்நிலையில் இன்று அவர் நாமக்கல்லில் பேசுகிறார். அதற்காக திருச்சிக்கு விமானத்தில் இருந்து அங்கிருந்து காரில் நாமக்கல் சென்றார்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து நாமக்கல் செல்வதற்காக அவர்கள் காரில் ஏற சென்ற போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் ‘ஏன் பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுக்கிறீர்கள்?’ என அவரிடம் கேட்டார்கள். அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே காரில் அமர்ந்து சென்று விட்டார்.
விஜய் செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பதை திமுகவினரும், நாம் தமிழர் கட்சியினரும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். விஜய் எழுதி வைத்ததைத்தான் படிப்பார். செய்தியாளர்கள் பதில் சொல்லும் அளவிற்கு அவருக்கு அவருக்கு அரசியல் அறிவில்லை என்றெல்லாம் பேசி வரும் நிலையில் விஜய் தொடர்ந்து அதை கடைபிடித்து வருவது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.