
Cinema News
உயிருக்கு போராடிவரும் தாடி பாலாஜி.. கடைசி நிமிடத்தில் விஜய்க்கு எழுதிய உருக்கமான கடிதம்..
சினிமா நடிகர் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறி இருக்கிறார் மேலும் அவர் கூறியவற்றை பார்க்கலாம்.
தாடி பாலாஜி மருத்துவமனையில் அனுமதி :
”தாடி பாலாஜி கடந்த ஒரு மாதம் காலமாக தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். சமீபத்தில் அவரிடம் தொலைபேசியில் பேசினேன். வயிறு பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறதாக கூறியிருந்தார். அவரிடம் பேச்சுவாக்கில் என்ன சார் நீங்க வேலை பார்க்கும் தனியார் தொலைக்காட்சியில் எல்லோருக்கும் ஏதாவது பிரச்சனை வருகிறது”.
அங்கு வேலை பார்த்தால் பிரச்சனைதான் :
”ஒன்று divorce ஆகிறது. இல்லையென்றால் ஏதாவது சர்ச்சையில் சிக்கி விடுகிறார்கள். இல்லையென்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டு போகிறார்கள். என்ன சார் காரணம் என்று அவரிடம் கேட்டேன். அவரும் இந்த கேள்விக்கு சில சமாளிப்புகளை கொடுத்தார். மேலும் kpy பாலா பற்றி கேட்டேன்”.
kpy பாலாவின் தேவையற்ற விளம்பரம் :
”அதற்கு அவர் இப்படி விளம்பரம் செய்யக்கூடாது. நானும் தான் சில உதவிகள் பண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அது வெளியே தெரியாது. இப்படி தேவையற்ற விளம்பரம் செய்வதால்தான் அவருக்கு சிக்கல் ஏற்படுகிறது. என்று சொன்னார். தாடி பாலாஜிக்கு குடல் பிரச்சினை என்று தெரிகிறது”.

விஜய்க்கு எழுதிய கடிதம் :
”இரண்டு வருடம் முன்பு வரை குடிப்பழக்கம் இருந்ததாகவும் அதன் பிறகு எனக்கு எந்த குடிப்பழக்கமும் இல்லை என்று கூறினார். tvk தரப்பில் விசாரிக்கும் பொழுது அவர் ஏதோ விஜய்க்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார் என்று தகவல் கிடைத்தது. அந்த கடிதம் இப்போது வரை விஜய்க்கு கிடைத்ததா? என்பது தெரியவில்லை. விஜயின் தீவிர விசுவாசி தாடி பாலாஜி ஒருமுறை விஜயின் உருவப்படத்தை அவர் நெஞ்சில் பச்சை குத்தி இருந்தார்”.
தீராத குடிப்பழக்கம் :
- ”அதற்கு தாடி பாலாஜியை கடுமையாக விமர்சித்து பேசினேன். அதனாலயே என்னவோ தாடி பாலாஜி விஜய் பற்றி என்னிடம் பேசவில்லை. அவரின் வயிற்று வலி தான் தற்போது அவசர சிகிச்சையில் இருப்பதற்கு காரணம். ஒரு காலத்தில் அவர் அளவுக்கு அதிகமாக குடித்ததால் கூட இந்த பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம்”.
- ”இதே போல தான் காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்த்தாலே ஒன்று டிவோஸ் கேஸ் ஆகிறது, அப்படி இல்லை என்றால் நோய்வாய் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள், அதுவும் இல்லை என்றால் இளம் வயதிலேயே செத்துப் போகிறார்கள்”.
- ”அந்த டிவி சேனலுக்கு ஏதோ கண் திருஷ்டி போல் தெரிகிறது. அந்த தனியார் தொலைக்காட்சியால் புகழ் அடைந்தவரும் இருக்கிறார்கள். அதனால் வீழ்ந்தவரும் இங்கு உண்டு. கூடிய சீக்கிரம் தாடி பாலாஜி மீண்டும் நல்ல நிலைமையுடன் திரும்ப வருவார் என்று எதிர்பார்க்கிறோம்”. என்று கூறியுள்ளார்