
latest news
TVK Vijay: என்னை இவ்ளோ நம்புறீங்களா?!. ஒரு கை பாத்துடலாம்!. ஆவேசமாக பேசிய விஜய்!…
சினிமாவில் நடித்து வந்த நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்து தற்போது தவெக தலைவராக மாறிவிட்டார். அதோடு 2026 சட்டமன்ற தேர்தலை அவர் குறி வைத்திருக்கிறார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிக சதவீத வாக்குகளை வாங்கி அதிமுக, திமுக போன்ற கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாற வேண்டும் என அவர் முடிவு எடுத்திருக்கிறார்.
தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருப்பதால் விஜய் தனது அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறார். தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களுக்கும் சென்று மக்களை சந்திக்க முடிவு எடுத்துள்ள விஜய் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதல் வாரம் திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு சென்ற விஜய் அடுத்த வாரம் நாகப்பட்டினம் சென்றார். மூன்றாவது வாரமான இன்று நாமக்கல் சென்றார். அங்கும் அவருக்காக கூடியிருந்த ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்பு சுமார் 20 நிமிடங்கள் பேசினார்.

அப்போது 2021 சட்டமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதிக்கு செய்யப்படுவதாக திமுக அளித்த வாக்குறுதிகள் பற்றி பேசினார். அவரிடம் பலவற்றை நிறைவேற்றவில்லை என புகார் சொன்னார். அவர் செல்லும் வழியெங்கும் அவரைக் காண பொது மக்களும், ரசிகர்களும், தொண்டர்களும் காத்திருந்தனர். அவரின் வண்டியை பின் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இருசக்கர வாகனங்களில் வந்தனர்.
விஜயை ஒரு முறை பார்த்து விட வேண்டும் என சாலையோரம் பலரும் மிகவும் ஆவலாக நின்று கொண்டிருந்தார்கள். மேலும், விஜய்கு பல பரிசு பொருட்களை ரசிகர்களும், தொண்டர்களும் பரிசளித்தனர். இதையெல்லாம் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட விஜய் நாமக்கல்லில் பேசும் போது ‘நானும் இரண்டு வாரங்களுக்கு முன்பு இதை துவங்கிய போது என்னவோ நினைத்தேன்.
ஆனால் எனக்காக கூடும் கூட்டத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் மீது இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கீங்களா?.. என்னை இவ்வளவு நம்புகிறீர்களா?.. சத்தியமா சொல்கிறேன்.. அப்போ ஒரு கை பாத்துடலாம்’ என என ஆவேசமாக பேசினார்.