Connect with us
tvk vijay

Cinema News

விஜய் பேச்சில் ஏற்பட்ட தடுமாற்றம்.. மறைமுக கும்பலுக்கு டன் கணக்கில் தீனி கொடுத்துட்டாரே..

தீயாய் வேலை செய்யும் விஜய் :

  • தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற தீயாய் வேலை செய்து வருகிறார். அதற்கான கள பிரச்சாரத்தில் விஜய் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறார். வாரந்தோறும் வரும் எல்லா சனிக்கிழமைகளிலும் விஜய் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
  • முதற்கட்டமாக திருச்சி மரக்கடையில் ஆரம்பிக்கப்பட்ட இவரது தேர்தல் பிரச்சாரம் தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது இன்று நாமக்கல் மாவட்டத்தில் தனது தேர்தல் பரப்புரையை விஜய் வழங்கினார்.
  • ஒவ்வொரு வாரமும் விஜய் வரும் பொழுது அவருடன் பிரச்சனையும் கூட வருகிறது. அந்த வகையில் இந்த முறை விஜய்தான் content. இதுவரை தான் பேசிய இரண்டு மாநில மாநாட்டிலும் சரி தேர்தல் பரப்புரையிலும் சரி விஜய் பேச்சு அனல் பறக்க இருந்தது. இவரது பேச்சு அரசியல் எதிரிகளுக்கு பீதியை கிளப்பும் விதமாக இருந்தது.

விஜய் பேச்சில் ஏற்பட்ட தடுமாற்றம் :

விஜயின் பேச்சு பல விமர்சனங்களை சந்தித்தாலும் இன்று விஜயே சர்ச்சையில் சிக்கி உள்ளார். இன்று விஜயின் பேச்சு பயங்கர தடுமாற்றத்துடன் இருந்தது. அதிலும் குறிப்பாக சென்னை மகானம் (மாகாணம்), உணர்ச்சியூற்ற மட்டும் (மண்ணும்), பிற்படுத்தப்பப்பட்ட மக்களுக்கு (பிற்படுத்தப்பட்ட), அமைக்கிக்கணும் (அமைக்கணும்) கொள்முதல் திலையங்கள் (நிலையங்கள்), பாடிதிக்கப்பட்டுள்ளனர் (பாதிக்கப்பட்டுள்ளனர்), தேர்தல் அறிக்கையில் செல்வோம் (சொல்வோம்) ஒத்தையடி பாதை போதப்படும் (போடப்படும்), ம..ம.. மருத்துவ வசதி இன்று நடந்ததில் ஹைலைட்டை இதுதான் tvk மறுபடியும் ஆட்சி அமைக்கணுமா?…சாரி, இப்போ ஆட்சி அமைக்கணுமா?, என்று தன்னுடைய உரையை வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டி உள்ளார்.

அதன் பிறகு உரையை முடித்து பின் சாரி நான் பேசுவது அங்கு ஒலிக்கும் சத்தமும் முன்பின் சற்று வித்தியாசமாக இருந்தது. ரிதமை பிடிக்க சற்று நேரம் ஆகிவிட்டது, என்று கூறி நன்றி அங்கிருந்து விடைபெற்றார்.

நெட்டிசன்களுக்கு தீனி :

சும்மாவே விஜயை அவரை அழிக்க நினைக்கும் மறைமுக கும்பல்கள் வச்சு செய்வார்கள். இப்படி விஜய் வழிய வந்து கன்டென்ட் கொடுத்தால் சும்மா விடுவார்களா ? அடுத்த சனிக்கிழமை வரை இனிமேல் இதுதான் அவர்களுக்கு கன்டென்ட். இனிமேல் விஜயின் இந்த பேச்சை memes போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளப் போகிறார்கள். அடுத்த சனிக்கிழமை வரை கன்டென்ட் ரெடி.

author avatar
SATHISH G
சதீஷ் பி.இ. பட்டதாரியான இவர் 3 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top